இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூரேஷ் ரெய்னா, முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாரத ரத்னா, இந்தியாவின் மிக உயரிய குடிமக்கள் விருதாகும், இது தங்கள் துறைகளில் மிக சிறந்த பங்களிப்பு அளித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுவது எளிதல்ல,
ஏனெனில் சிறப்பான சாதனைகளைப் புரிந்து, நாட்டின் பெயரை உலக அரங்கில் பதித்தவர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படுகிறது.விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார், இதன்மூலம் 14 ஆண்டுகால அவரது டெஸ்ட் பயணம் முடிவுக்கு வந்தது. 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 46-க்கு மேல் சராசரியுடன் 9,230 ரன்கள் குவித்தார்.
கோலி சாதனைகள்:
இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அடுத்து நான்காவது இடத்தில் உள்ளார். மேலும், இந்திய டெஸ்ட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக, 68 போட்டிகளில் 40 வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்தார்.
“விராட் கோலி இந்தியாவுக்காக பல சாதனைகளைப் புரிந்துள்ளார், எனவே இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்,” என ரெய்னா ஸ்டார் ஸ்தெரிவித்தார்.கோலி வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டிலும் மிகவும் வெற்றிகரமாக உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000-த்திற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்துள்ள 36 வயது கோலி, சச்சின் டெண்டுல்கரின் 18,426 ரன்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
பாரத ரத்னா விருது வென்ற சச்சின்:
ஒருநாள் கிரிக்கெட்டில் சதங்களைப் பொறுத்தவரை, டெண்டுல்கரின் 49 சதங்களை முந்தி, கோலி 51 சதங்கள் பதிவு செய்துள்ளார்.தற்போது, சச்சின் டெண்டுல்கர் மட்டுமே பாரத ரத்னா விருது பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் ஆவார். 2014-ல், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. மும்பை அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், இப்போ அவங்க தான் கிங்- சஞ்சய் மஞ்சுரேக்கர்
664 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 34,357 ரன்கள் குவித்த டெண்டுல்கர், உலகில் வேறு எந்த கிரிக்கெட் வீரரும் அடையாத 100 சதங்களைப் பதிவு செய்தவர்.
டெண்டுல்கரைத் தவிர, டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர், லதா மங்கேஷ்கர், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், அடல் பிகாரி வாஜ்பாய், தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜி ராமசந்திரன் ஆகியோரும் இந்த உயரிய விருதைப் பெற்றவர்களில் அடங்குவர்.






