ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் ஒரு கட்டத்தில் கீழே இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, தொடர் வெற்றிகளால் அபாரமாக மீண்டு வந்து, பிளேஆஃப் வாய்ப்புகளை மீட்டெடுத்துள்ளது. ஐந்து முறை சாம்பியனான இந்த அணி, தனது முதல் ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகளைச் சந்தித்து தடுமாறியது. ஆனால், தற்போது ஆறு தொடர் வெற்றிகளுடன் 12 போட்டிகளில் 14 புள்ளிகளுடனும், 1.156 என்ற ரன் ரேட்டுடனும் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான சமீபத்திய தோல்விக்குப் பிறகும், மும்பை அணி பிளேஆஃப் இடத்திற்கு வலுவாக போராடி வருகிறது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், மும்பையின் இந்த செயல்பாட்டை பாராட்டி, ஆரம்பகால சவால்களை மீறி அணி ஒன்றிணைந்து வெற்றி பெற்றதக கூறியுள்ளார்.
திருப்புமுணையை ஏற்படுத்திய வீரர்கள்:
இது குறித்து பேசிய அவர், “சூர்யகுமார் யாதவ் தனது சிறந்த ஐபிஎல் சீசன்களில் ஒன்றை வெளிப்படுத்தி வருகிறார். அழுத்தமான சூழல்களில், மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரீத் பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் சமீபத்திய ஃபார்மில் இல்லாத போதிலும் ரோஹித் ஷர்மா ஆகியோர் பிரகாசிக்கின்றனர். இதனால்தான் அவர்கள் தொடர் வெற்றியாளர்களாக உள்ளனர்.”
“சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷேன் வாட்சன் அல்லது மைக் ஹசி போன்று முக்கிய தருணங்களில் மும்பை அணியில் போட்டியை மாற்றும் வீரர்கள் உள்ளனர். இந்தத் திறனே அவர்களை ஆபத்தான அணியாக ஆக்குகிறது,” என்று மஞ்ச்ரேக்கர் ஜியோஹாட்ஸ்டாரில் தெரிவித்தார்.
ஆதிக்கம் செலுத்துகிறார்கள்:
மும்பையின் இந்த திருப்புமுனைக்கு முக்கிய வீரர்கள் முக்கிய பங்கு வகித்தனர். சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தியுள்ளது, அதே நேரத்தில் ஜஸ்பிரீத் பும்ரா காயத்திலிருந்து மீண்டு பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ரியான் ரிக்கெல்டன், வில் ஜாக்ஸ் போன்ற வெளிநாட்டு வீரர்கள் முக்கிய போட்டிகளில் இல்லாத போதிலும், மஞ்ச்ரேக்கர் மும்பையின் பலம், வீரர்களை சரியான ரோல்களை தருவதும், அழுத்தத்தில் சிறப்பாக செயல்படுவதிலும் உள்ளதாக கருதுகிறார்.
“ரியான் ரிக்கெல்டன், வில் ஜாக்ஸ் போன்ற வீரர்கள் முக்கிய போட்டிகளில் இல்லாவிட்டாலும், அவர்களின் பயணம் பாதிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. ஆரம்பத்தில் அவர்கள் தடுமாறினாலும், இப்போது தெளிவான திட்டத்துடன் வீரர்களை சரியாகப் பயன்படுத்துகின்றனர்,” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: தோனிக்கு மட்டுமே உண்மையான ரசிகர் இருக்காங்க.. மத்தவங்களுக்கு கதையே வேற – ஹர்பஜன் சிங் பேச்சு
மும்பை அணியின் மீதமுள்ள லீக் ஆட்டங்கள், டெல்லி கேப்பிடல்ஸுக்கு மே 21ஆம் தேதியிலும், பஞ்சாப் கிங்ஸுக்கு மே 26 தேதியிலும் எதிராக மோத உள்ளன.
இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளேஆஃபுக்கு உறுதியாக முன்னேறலாம். ஒரு வெற்றி பெற்றால் கூட , மற்ற அணிகளின் சாதகமாக அமைந்தால், அவர்களின் வலுவான ரன் ரேட் காரணமாக முதல் நான்கு இடங்களுக்குள் கொண்டு செல்லலாம்.






