சூரியகுமார் விஷயத்தில் சுரேஷ் ரெய்னா அபினவ் முகுந்த் கருத்து மோதல்!

0
4900
Sky

இந்திய அணி இந்த வருட துவக்கத்தில் தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இலங்கை அணி உடன் விளையாடி முடித்துவிட்டு நியூசிலாந்து அணியுடன் தற்போது ஒரு நாள் தொடரை விளையாடி வென்று அடுத்து டி20 தொடரை விளையாட இருக்கிறது!

இதற்கு அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மிக முக்கியமான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாவில் சந்திக்கிறது.

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில், இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சிப் போட்டியில் கடந்த மூன்று வருடங்களாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் மும்பை வீரர் சப்ராஸ் கான் தேர்வு செய்யப்படாதது பெரிய அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. அதே சமயத்தில் அவருக்குப் பதிலாக டி20 கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் ஆக உருவாக்கி வந்திருக்கும் சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பிரபல வீரர் சுரேஷ் ரெய்னா பேசும் பொழுது ” அவர் செயல்படும் விதத்தை பார்த்தால் அவர் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் வெளிப்படுத்தும் விதம் நிகழ்த்தும் விதம் எல்லாமே மிக அருமையாக இருக்கிறது. அவருக்கு மைதானத்தின் பக்கங்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நன்றாக தெரியும். மேலும் அவர் ஒரு மும்பை வீரர் அவருக்கு சிவப்பு பந்து போட்டியை எப்படி விளையாட வேண்டும் என்றும் தெரியும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாடுவது அவருக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட உதவியாக இருக்கும் என்றும் நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்!

இந்த நிலையில் இது பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் ” நாம் ரஞ்சி போட்டியை எதற்காக வைத்திருக்க வேண்டும்? சர்பராஸ் கான் சொல்ல முடியாத அளவிற்கு மிகச் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். நான் குறைந்தபட்சம் ஒரு பரிசாக அவரது பேட்டிங் ஃபார்ம்க்கு ஆஸ்திரேலியா தொடரில் தேர்வு செய்து தொப்பியை வழங்கி இருப்பேன். டி20 கிரிக்கெட் வடிவத்தில் சூரியகுமார் யாதவ் விதிவிலக்கான ஒரு பேட்ஸ்மேன். அதே மாதிரியான போர் குணத்தை டெஸ்ட் போட்டிகளிலும் இவர்கள் இவரிடம் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நான் படிநிலையை விரும்புகின்ற ஒரு ஆள் எனவே நான் சர்ப்ராஸ்கானுக்குதான் வாய்ப்பு தந்திருப்பேன்!” என்று சுரேஷ் ரெய்னாவின் கருத்துக்கு மாறுபட்ட கருத்தை அதிரடியாக தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -