“சூப்பர் மேன்” கில் அடித்தார் அபார அதிரடி சதம் ; அகமதாபாத்தில் தொடரும் கில்லின் அசாத்திய ஆதிக்கம்!

0
469
Gill

இன்று ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியின் புவனேஸ்வர் குமாரின் முதல் ஓவரில் ரன் இல்லாமல் குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர் சகா ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து கில் உடன் சாய் சுதர்சன் இணைந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி இரண்டாவது விக்கட்டுக்கு 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சாய் சுதர்சன் 47 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இன்னொரு முனையில் விளையாடிய துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரைக் கட்டுப்படுத்துவது ஹைதராபாத் பந்துவீச்சாளர்களுக்கு மிகக் கடினமான வேலையாக இருந்தது.

அதே சமயத்தில் மற்ற குஜராத் பேட்ஸ்மேன்களை எளிதாக ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினார்கள். கடைசி ஐந்து ஓவரில் 34 ரன்கள் மட்டும் தந்து ஏழு விக்கட்டுகளை வீழ்த்தினார்கள்.

- Advertisement -

புவனேஸ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் மட்டும் நான்கு விக்கெட்டுகள் விழுந்தது. அந்த ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே வந்தது. புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களுக்கு 30 ரன்கள் தந்து ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இப்படி ஒரு பக்கம் குஜராத் அணி வீழ்ந்து கொண்டிருக்க, மறுபக்கம் சுப்மன் கில் அகமதாபாத் மைதானத்தில் தனது ஆதிக்கத்தை மேலும் மேலும் தொடர்ந்தார். இதையடுத்து அவர் 56 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இறுதியாக 58 பந்தில் 101 ரன்கள் உடன் ஆட்டம் இழந்தார்.

சுப்மன் கில் அகமதாபாத் மைதானத்தில்தான் தனது முதல் டி20 சதத்தையும், தனது முதல் இந்திய மண்ணிலான டெஸ்ட் சதத்தையும் அடித்து இருந்தார். இன்று தனது முதல் ஐபிஎல் சதத்தையும் பதிவு செய்து அசத்தியிருக்கிறார்.