சூப்பர் மேன் கில் அதிரடி அசத்தல் சதம்; மொத்த விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்!

0
1174
Gill

இந்தியா நியூசிலாந்து அணிகள் தற்பொழுது இந்தியாவில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகின்றன. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இந்தியா தலா ஒரு போட்டிகளை வென்று தொடரை சமநிலையில் வைத்திருந்தன.

இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய மைதானமான குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அமைந்துள்ள மைதானத்தில் தொடரை யாருக்கென்று முடிவு செய்யும் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது!

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வென்ற இந்தியா அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்ந்தெடுக்க, இந்த முறையும் இசான் கிஷான் ஒரு ரன்னில் ஏமாற்றினார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி மிகச் சிறப்பாக விளையாடி 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த சூரியகுமார் 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து சுப்மன் கில் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து சூப்பர் மேன் ஆக மாறி நியூசிலாந்து பந்துவீச்சை நொறுக்கி தள்ளி எடுத்து விட்டார். அபாரமாக விளையாடிய கில் 35 பந்துகளில் தனது முதல் டி20 சர்வதேச அரை சதத்தை அடித்தார். இதற்கு அடுத்து மேலும் அதிரடியில் ஈடுபட்ட அவர் 54 பந்துகளில் தனது முதல் டி20 சதத்தை எட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த ஜோடி 41 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்தது. ஹர்திக் பாண்டியா 17 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்!

இறுதி வரை களத்தில் நின்ற சுப்மன் கில் 63 பந்துகளில் 126 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். இதில் 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடக்கம். டி20 போட்டிகளில் ஒரு இந்திய பேட்மேனின் அதிகபட்ச ரன் இதுதான். இதற்கு முன் ஆப்கானிஸ்தான் உடன் விராட் கோலி 122 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்திருக்கிறது. டி20 போட்டியில் இந்திய அணியின் அதிகபட்ச ரன் இதுவாகும்!

- Advertisement -