6 பாஸ்ட்-பவுலிங், 2 ஸ்பின்னர்; கடப்பாரை அணியாக களமிறங்கும் ஆஸ்திரேலியா – நியூசிலாந்தை வீழ்த்த பக்கா பிளான்!

0
194

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது ஆஸ்திரேலிய அணி.

உலகக் கோப்பை தொடரில் தகுதிச்சுற்று முடிவடைந்து நெதர்லாந்து, இலங்கை, அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டனர். சூப்பர் 12 சுற்று அக்டோபர் 22 ஆம் தேதி துவங்குகிறது.

முதல் சூப்பர் 12 போட்டியில் தொடரை நடத்தும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பந்துவீச்சை தேர்வு செய்த பிறகு கேப்டன் ஆரோன் பின்ச் பேசுகையில், “மைதானம் மெல்ல மெல்ல பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். ஆகையால் முதலில் நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்து குறைந்த ரன்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்த விரும்புகிறோம். ஆஸ்திரேலியா போன்ற வரலாற்று சிறப்புமிக்க அணிக்கு பொறுப்பேற்று விளையாடும்போது சற்று அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். ஆனாலும் ரசிகர்கள் எங்களுக்கு அதிகமாக ஆதரவு தருவது முற்றிலுமாக போக்கிவிடுகிறது. இன்றைய போட்டியில் ஸ்மித், ரிச்சர்ட்சன், அகர் மற்றும் கிரீன் ஆகியோர் வெளியில் அமர்த்தப்பட்டு இருக்கின்றனர்.” என்றார்.

இன்றைய போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா அணி:

ஆரோன் பின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட்(கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

டாசில் தோல்வி அடைந்த பிறகு பேட்டி அளித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், “நாங்களும் அதே காரணத்திற்காக பந்துவீச்சை தேர்வு செய்ய முடிவு செய்தோம். ஆனால நடந்ததை மாற்ற முடியாது. எங்களது வீரர்கள் தொடர்ந்து அதிதீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய போட்டியில் அது எங்களுக்கு கை கொடுக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து எங்களது திட்டத்தில் முழு கவனத்துடன் இருக்கிறோம். அன்றைய போட்டிக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்படுவதற்காக காத்திருக்கிறோம்.” என்றார்.

இன்றைய போட்டியில் களமிறங்கும் நியூசிலாந்து அணி:

டெவோன் கான்வே(கீப்பர்), ஃபின் ஆலன், கேன் வில்லியம்சன்(கேப்டன்), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்