இனி சொந்த மைதானத்தில் விளையாட மாட்டோம்.. அதிகாரிகள் மிரட்டுகிறார்கள் – ஹைதராபாத் திடீர் முடிவு

0
399
SRH

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க அதிகாரிகள் மிரட்டுகிறார்கள் எனவும், இதன் காரணமாக ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் விளையாடாமல் வேறு மைதானத்திற்கு செல்ல முடிவு செய்து இருப்பதாக உறுதியான தகவல்கள் வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிந்து இருக்கிறது. தற்போது ஹைதராபாத் மைதானம் தெலுங்கானா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த ஹைதராபாத் மைதானத்திற்கு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் பொறுப்பாக இருக்கிறது. தற்போது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி நிர்வாகத்திற்கும் இடையே பிரச்சனை உருவாகி இருக்கிறது.

- Advertisement -

என்ன பிரச்சனை நடந்தது?

ஒவ்வொரு போட்டிக்கும் 3900 காம்ப்ளிமென்ட்ரி டிக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் கொடுக்கிறது. இதில் F12A பாக்ஸில் 50 ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு கொடுக்கப்படுகிறது. ஆனால் இதை மாற்றி வேறொரு பாக்ஸில் கூடுதல் டிக்கெட்டுகளை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் கேட்டிருக்கிறது. இதை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தரவில்லை.

இதன் காரணமாக கடந்த போட்டியின் போது குறிப்பிட்ட பாக்ஸை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் பூட்டி வைத்திருக்கிறது. மேலும் இப்படியான இலவச டிக்கெட்டுகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தால் ஏற்பட்டு வருவதாக, அணி நிர்வாகம் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறது.

- Advertisement -

வெளிப்படையான அறிவிப்பு

இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பொது மேலாளர் ஸ்ரீநாத் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளர் ஸ்ரீனிவஸ் ராவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் இப்படியான பிரச்சினைகள் கடந்த இரண்டு வருடங்களாகத்தான் கொடுக்கப்பட்டு வருவதாகவும், இதை தாங்கள் தெலுங்கானா அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல இருப்பதாகவும், அதற்கு தாங்கள் கைப்பட ஒரு கடிதத்தை எழுதிக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார்.

மேலும் மிக முக்கியமாக ஐபிஎல் தொடர் நடந்து முடியும் வரையில் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடியது என்றும், அந்த நேரத்தில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் மைதானத்தில் எந்த விஷயத்திலும் தலையிட முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : சிஎஸ்கேவை விட ஸ்ட்ராங்.. ஆனா கடப்பாரை மும்பை தோற்கும் ரகசியம் என்ன?.. ஹர்திக் தரும் ப்ராப்ளம்

இத்துடன் இந்த நிலைமைகள் தொடர்ந்தால் தாங்கள் வெளியில் வேறு மைதானத்திற்கு செல்ல வேண்டியது இருக்கும் எனவும், ஆனால் இது குறித்து பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளத் தங்கள் தயாராக இருப்பதாகவும், ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் இதற்கு முன் வந்தால் தாங்கள் பேச விரும்புவதாகவும் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த பிரச்சனை ஐபிஎல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது!

- Advertisement -