ஐபிஎல் 2024

ஹசரங்கா இடத்துக்கு அஸ்வினின் சிஷ்யன்.. தமிழ் பையனை தட்டி தூக்கிய ஹைதராபாத்.. ஐபிஎல் 2024

நடப்பு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1.50 கோடி ரூபாய்க்கு இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்காவை ஒப்பந்தம் செய்தது. இந்த நிலையில் அவர் சில தனிப்பட்ட காரணங்களால் தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புதிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தலைமையில் ஒரு அளவுக்கு சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. அந்த அணி முழுக்க முழுக்க அதிரடியான அணுகு முறையை பேட்டிங்கில் வெளிப்படுத்தி விளையாடுகிறது. இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்னாக 277 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக எடுத்தது.

இதுவரையில் மொத்தம் நான்கு போட்டிகள் விளையாடி இரண்டில் தோல்வி இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. இரண்டு வெற்றிகளும் பெரிய அணிகளான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக வந்திருக்கிறது. அதே சமயத்தில் இந்த இரண்டு வெற்றிகளும் அவர்களுடைய சொந்த மைதானமான ராஜீவ் காந்தி ஹைதராபாத் மைதானத்தில் வந்திருக்கிறது.

தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளராக மயங்க் மார்க்கண்டே இருந்து வருகிறார். வெளிநாட்டு மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளராக வனிந்து ஹசரங்கா வாங்கப்பட்டிருந்தார். தற்பொழுது அவர் ஐபிஎல் தொடரை விட்டு விலங்கியதால், அவருடைய இடத்திற்கு இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞரான விஜயகாந்த் வியாஸ்காந்தை ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்திருக்கிறது.

- Advertisement -

இவர் 22 வயதான வலதுகை லெக் ஸ்பின்னர். இலங்கை அணிக்காக ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடி ஒரு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். அந்த போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசி 28 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக 33 டி20 போட்டிகள் விளையாடி 42 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இவர் இலங்கையின் ஜாப்னா கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகளில் விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : கோலி 19வது 20வது ஓவர்ல விளையாடுவது காயப்படுத்துது.. மைல்கல் ஜெயிக்க உதவாது – வாசிம் ஜாபர் விமர்சனம்

மேலும் இவருக்கு மிகவும் பிடித்த வீரர் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இளைஞர் அஸ்வினுடன் தொடர்ந்து இணைப்பில் இருந்து வருவதாகவும் கூறியிருந்தார்கள். சுழல் பந்துவீச்சை தொடர்பாக அவரது ஆலோசனைகளையும் கேட்கக் கூடியவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by
Tags: IPL2024

Recent Posts