இன்று ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. சொந்த மைதானத்தில் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தோல்விக்கான காரணங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு ரஜத் பட்டிதார் 20 பந்துகளில் 50 ரன்கள், விராட் கோலி 43 பந்தில் 51 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 206 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் தரப்பில் உனட்கட் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணிக்கு ஷாபாஷ் அகமது 40 ரன்கள், அபிஷேக் ஷர்மா மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ் தலா 31 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் அதிரடியான பேட்டிங் ஆர்டரை வைத்திருக்கும் ஹைதராபாத் அணி, மிகவும் பலவீனமாக இந்த ஐபிஎல் தொடரில் காணப்படும் ஆர்சிபி அணியை எளிதில் வெல்லும் என்று பலரும் நினைத்து இருந்தார்கள். ஆனால் இரண்டாவது பேட்டிங் செய்யும்பொழுது தடுமாறி ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது.
தோல்விக்கு பின் பேசிய ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறும் பொழுது “இது எங்களுக்கு சிறந்த இரவு கிடையாது. துரதிஷ்டவசமாக வசமாக எங்களுடைய பேட்டிங்கின் போது நாங்கள் சில விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்தோம். நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும்பொழுது அது எங்களுக்கு வேலை செய்கிறது. எங்கள் அணி சில வெற்றிகளை பெறுவதற்கு முன்பாக, நாங்கள் முதலில் பந்து வீசக்கூடிய அணி என்று நினைத்திருந்தோம். எங்களுடைய அ ணி தோல்வி அடையும் பொழுது பயிற்சியாளர் வெட்டேரி அணியினருடன் பேசுவார், வெற்றியடையும் பொழுது நான் பேசுவேன்.
இதையும் படிங்க : 100 சிக்ஸ் அடிச்ச ஐதராபாத்.. 1 மாதம் கழித்து வெற்றி பெற்ற ஆர்சிபி.. மீண்டும் தப்பிய சிஎஸ்கே
எங்களுடைய வீரர்கள் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறார்கள். இது டி20 கிரிக்கெட், எனவே இப்படியான ஒரு தோல்வி குறித்து பெரிதும் கவலைப்பட வேண்டியது கிடையாது.நாங்கள் அதிரடியாக விளையாடுவதுதான் எங்களுக்கு சரியான வழி. எனவே இப்படி விளையாடும் பொழுது எல்லா போட்டிகளையும் வெல்ல முடியாது. சில தோல்விகளும் வரத்தான் செய்யும். நாங்கள் எங்கள் அணுகு முறையில் நல்ல டோட்டலை பெறுகிறோம். தொடர்ந்து நாங்கள் இதே முறையில் செல்வோம்” என்று கூறி இருக்கிறார்.