சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த சூழ்நிலையில் சன்ரைசர்ஸ் அணி தோல்வி அடைந்த விதம் குறித்து அதன் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசி இருக்கிறார்.
சன்ரைசர்ஸ் அணி தோல்வி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக்சர்மா 27 பந்துகளில் 40 ரன்கள், ஹெட் 28 ரன்கள், கிளாசன் இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்ட வில் ஜாக்ஸ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க, வில் ஜாக்ஸ் 26 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். பின்னர் இறுதிக்கட்டத்தில் ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் 21 ரன்கள் குவிக்க, மும்பை இந்தியன்ஸ் அணி இறுதியில் 11 பந்துகளை மீதம் வைத்து 166 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோல்வி குறித்து பேட் கம்மின்ஸ்
இந்த சூழ்நிலையில் தோல்வி குறித்து சன் ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மிங் ஸ்கூரும்போது “மும்பை ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு எளிதாக இல்லை. நாங்கள் இன்னும் சில ரன்கள் அடிக்க விரும்பினோம், ஆனால் ஆடுகளம் அதற்கு தகுந்தவாறு இல்லை. நீங்கள் இங்கு வரும்போது விக்கெட் மிகவும் சரளமாகவும், வேகமாகவும் இருக்கும் என்று நினைப்பீர்கள். ஆனால் இந்த ஆடுகளம் அப்படி இல்லை. மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் நன்றாக பந்து வீசி எங்கள் பவர் ஹிட்டிங் ஏரியாக்களை மூடிவிட்டனர். எங்களிடம் அனைத்து விதமான ஷாட்கள் விளையாடும் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தேன்.
இதையும் படிங்க:கிளாசனின் சிறு தவறு.. கம்மின்ஸ் அபார கேட்ச் பிடித்தும்.. நோ-பால் வழங்கிய நடுவர்.. கிரிக்கெட் விதி சொல்வது என்ன?. முழு விபரம்
நாங்கள் பந்துவீச்சில் நல்ல வேகத்தை கொடுத்தோம். போட்டியில் வெற்றி பெற விக்கெட்டுகள் தேவை என்று நினைத்து விளையாடினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நன்றாக அமையவில்லை. இறுதி போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் நீங்கள் சொந்த மைதானத்தை விட்டு வெளியே அதிக வெற்றிகளை பெற வேண்டும். ஆனால் இதுவரை அது எங்களுக்கு சரியாக செட் ஆகவில்லை. எனவே எங்களுக்கு சிறிய இடைவெளி உள்ளது. பொறுப்பற்ற பவர் ஹிட்டிங் இல்லை. எங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அடுத்த ஆட்டம் எங்கள் சொந்த மண்ணில் நடைபெற உள்ளது எனவே அங்கு என்ன சூழ்நிலை உள்ளது என்று எங்களுக்கு தெரியும்” என்று பேசி இருக்கிறார்.






