வைபவ் சூர்யவன்ஷியின் இரட்டைச் சதம் குறித்து ஷோயப் அக்தர் பேசியிருக்கிறார். அவரது அதிரடி பேட்டிங் மற்றும் இந்திய அணியில் அவருக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் குறித்து அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
குறைந்த பந்துகளில் ஏராளமான பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசிய இளம் வீரரின் ஆட்டம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் இத்தகைய வேகமான இன்னிங்ஸை எதிர்பார்க்கவில்லை என்று அவர் வியப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஷோயப் அக்தர் பேசும்போது, “வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங்கைப் பார்த்த பிறகு நான் உண்மையிலேயே வார்த்தைகளற்றுப் போய்விட்டேன். வெறும் 52 பந்துகளில் 35 பவுண்டரிகள், அதில் 28 சிக்ஸர்கள் மற்றும் 7 ஃபோர்கள். ஓ மை குட்னஸ்! இது முற்றிலும் நம்ப முடியாதது. ஒடிஐ கிரிக்கெட்டில் வெறும் 52 பந்துகளில் இரட்டைச் சதம் அடிப்பது எப்போதாவது நடக்கும் என்று நான் கற்பனை கூட செய்ததில்லை. கிளப் கிரிக்கெட் முதல் இன்டர்நேஷனல் கிரிக்கெட் வரையிலான எனது முழு கிரிக்கெட் பயணத்திலும், யாரும் இப்படி பேட்டிங் செய்ததை நான் பார்த்ததில்லை. அவர் உண்மையிலேயே ஒரு ஸ்பெஷல் பிளேயர். அவரைப் போன்ற ஒரு பிளேயரை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை, அவரைப் போன்ற ஒருவரை இனிமேல் பார்ப்போமா என்றும் எனக்குத் தெரியவில்லை” கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து ஷோயப் அக்தர் பேசும்போது, “வைபவ் சூர்யவன்ஷி முற்றிலும் நம்ப முடியாதவர். அவர் ஒரு விலைமதிப்பற்ற ரத்தினம். எதிர்காலத்தில் இந்தியாவுக்காகத் தனி ஆளாகப் பல போட்டிகளை வென்று தருவார். அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய சொத்து, பிசிசிஐ அவரைச் சரியாகக் கவனித்துக் கொள்ள வேண்டும், மேலும் இந்திய ஸ்குவாடில் அவருக்குப் படிப்படியாக வாய்ப்புகளை வழங்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
இறுதியாக ஷோயப் அக்தர் பேசும்போது, “அவர் போட்டிகளைத் தானாகவே வென்று தரக்கூடிய திறன் கொண்ட உண்மையான மேட்ச்-வின்னர். நேர்மையாகச் சொல்கிறேன், அவரது பேட்டிங்கால் நான் முற்றிலும் பிரமித்துப் போயிருக்கிறேன். என்ன ஒரு ஸ்பெஷல் டேலண்ட்” என்று ஷோயப் இருக்கிறார்.






