கிளாசனின் சிறு தவறு.. கம்மின்ஸ் அபார கேட்ச் பிடித்தும்.. நோ-பால் வழங்கிய நடுவர்.. கிரிக்கெட் விதி சொல்வது என்ன?. முழு விபரம்

0
351

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டன் ஜீசன் அன்சாரியின் அற்புதமான பந்துவீச்சில் கேப்டன் பேட் கம்மின்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டம் இழந்தார்.

ஆனால் விக்கெட் கீப்பர் கிளாசன் செய்த சிறு தவறால் அது நோபால் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

- Advertisement -

கிளாஸ்ன் செய்த தவறு

வான்கடேயில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக அபிஷேக்சர்மா 28 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். பத்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட வில் ஜாக்ஸ் மூன்று ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கிய நிலையில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் இன்னிங்சை விளையாட ஆரம்பித்தனர். இதில் அதிரடியாக விளையாட ஆரம்பித்த ரோஹித் சர்மா 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேற, மறுமுனையில் ரிக்கல்டன் தொடர்ந்து விளையாட ஆரம்பித்தார். இந்த சூழ்நிலையில் போட்டியின் 7வது ஓவரை சுழற் பந்துவீச்சாளர் ஜீசன் அன்சாரி வீசினார். அதன் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட ரிக்கல்டன் ஸ்லிப் திசையில் தூக்கி அடிக்க அதனை அற்புதமாக கேப்டன் கம்மின்ஸ் கேட்ச் பிடித்தாலும் கீப்பர் கிளாசன் பேட்ஸ்மேன் பந்தை அடிப்பதற்கு முன்பாக ஸ்டம்புக்கு முன் கைகளைக் கொண்டு வந்ததால் அதை நடுவர் நோபால் என்று அறிவித்தார்.

- Advertisement -

கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது

கிரிக்கெட் விதிப்படி “அதாவது ஒரு பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்ளும் போது பந்து பேட்டில் பட்ட பிறகு வேண்டுமானால் பின்னால் நிற்கும் விக்கெட் கீப்பரின் கைகள் ஸ்டம்புக்கு முன்னால் வரலாம். அல்லது ஒருவேளை பேட்ஸ்மேன் பந்தை மிஸ் செய்தால் அதை விக்கெட் கீப்பர் ஸ்டம்புக்கு பின்னால் இருந்தே பிடிக்க வேண்டுமே தவிர ஒருபோதும் கைகளை ஸ்டம்புக்கு முன்னால் கொண்டு வரக்கூடாது. இதனை விக்கெட் கீப்பர் மீறும் பட்சத்தில் நடுவர் அதனை நோ பாலாக அறிவிப்பார்.

இதையும் படிங்க:ஆர்சிபியிடம் வாங்கியது வீண் போகல.. ஆல் ரவுண்டராக ஜொலித்த வில் ஜாக்ஸ்.. மும்பை அணி தொடர் வெற்றி.. 4 விக்கெட்டில் சன்ரைசர்சை வீழ்த்தியது

எனவே இந்தப் போட்டியிலும் கிளாசன் செய்த தவறால் நடுவர் அதனை நோ-பால் ஆக அறிவித்தார். இருப்பினும் ரிக்கல்டன் 23 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான ஆட்டத்தால் 18.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது 3வது வெற்றியை பதிவு செய்திருக்கும் நிலையில் 5வது தோல்வியை சந்தித்து சன்ரைசர்ஸ் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -