ஒத்துக்கிறேன்.. ஒரே மாதிரி ஆடினா வேலைக்கு ஆகாது.. இனி இந்த விஷயத்துல கவனம் செலுத்தனும் – பேட் கம்மின்ஸ் பேட்டி

0
277

18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

டெல்லி அணி சிறப்பான வெற்றி

இந்த போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க்கின் சிறப்பான பந்துவீச்சால் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் குவித்தது. அபிஷேக் ஷர்மா 1 ரன், ட்ராவிஸ் ஹெட் 22 ரன், நிதீஷ் குமார் ரெட்டி 0 ரன் ஆட்டம் இழந்து வெளியேற இளம் வீரர் அனிக்கேத் வர்மா 41 ரன்னில் 74 ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடிய ஸ்டார்க் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி தனது சிறப்பான பவுலிங் வெளிப்படுத்தினார்.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கியது. டெல்லி அணியின் துணை கேப்டன் பாப் டூ பிளஸ்சிஸ் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் 27 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 50 ரன்கள் குவித்து டெல்லி அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார். இதனால் டெல்லி அணி 16 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

- Advertisement -

தோல்விக்கான காரணம் குறித்து கம்மின்ஸ்

இந்த சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து சன்ரைசர்ஸ் கேப்டன் கூறும் போது “நாங்கள் இந்த ஆட்டத்தில் முன்னேறவில்ல. ஸ்கோர் போரில் குறிப்பிடத்தக்க ரன்களையும் பெறவில்லை. சில தவறான ஷாட்களால் நாங்கள் ஆட்டம் இழந்தோம். இந்த வடிவ ஆட்டத்தை பொறுத்த வரை கேட்ச்கள் எடுப்பது ஆட்டத்தை மாற்றக் கூடிய விதத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இது பெரிய வித்தியாசமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. வேறொரு நாளில் நீங்கள் இதே வடிவத்தில் வேறொரு ஷாட்கள் மூலமாக முன்னேற முடியும். கடந்த இரண்டு ஆட்டங்களில் எல்லாம் நம் வழியில் செல்லவில்லை. நாம் திரும்பிப் பார்த்து செய்த தவறுகள் குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த போட்டியில் இளம் வீரர் அணிகேத் வர்மா சிறப்பாக செயல்பட்டார்.

இதையும் படிங்க:16 ஓவரில் 166 ரன்.. டூ பிளஸ்சிஸ் அசத்தல் பேட்டிங்.. ஸ்டார்க் வேகத்தில் சரிந்த சன்ரைசர்ஸ்.. 7 விக்கெட்டில் டெல்லி வெற்றி.. ஐபிஎல் 2025

அவர் பயிற்சியாட்டங்களிலேயே சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். எங்கள் அணியின் மிடில் வரிசை சற்று கவலைக்குரிய விதத்தில் உள்ளது. ஆனால் அதில் சிறப்பாக செயல்பட்டு நாங்கள் முன்னேறுவோம் என்று நம்புகிறேன். இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் நாங்கள் செய்த தவறுகளை திரும்பிப் பார்த்து அதில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை உள்ளது” என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -