ஐபிஎல் கிரிக்கெட் 10வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
டெல்லி சன்ரைசர்ஸ் மோதல்
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி ஹைதராபாத் அணிக்கு தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் களம் இறங்கினார்கள். 1 ரன்னில் விளையாடிக் கொண்டிருந்த போது அபிஷேக் ஷர்மா விப்ராஜ் நிகாமால் எதிர்பாராத விதமாக ரன் அவுட் செய்யப்பட்டார். ட்ராவிஸ் ஹெட் 12 ரன்னில் 4 பௌண்டரியோடு 22 ரன் விளையாடிக் கொண்டிருந்த போது ஸ்டார்க் அவரை வீழ்த்தினார்.
7 விக்கெட்டில் கேப்பிட்டல்ஸ் வெற்றி
அதற்குப் பின்னர் களமிறங்கிய இஷான் கிஷான் 2 ரன்னில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பின்னர் களமிறங்கிய நித்திஷ் ரெட்டியும் அவரது பந்துவீச்சிலேயே ஆட்டம் இழக்க, 37 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த தத்தளித்த சன்ரைசர்ஸ் அணிக்கு இளம் வீரர் அணிக்கேத் வர்மா ஆதரவு அளித்தார். 41 பந்துகளை எதிர்கொண்டு 74 ரன்கள் குவிக்க அவரோடு பாட்னர்ஷிப் அமைத்த கிளாஸன் 19 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் மட்டுமே குவித்தது.
பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஸ்டார்க் 3.4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதற்கு பின்னர் வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேக் பிரேசர் மற்றும் டூ பிளஸ்சிஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.1 ஓவர்களில் 81 ரன்கள் குவித்தது. இதில் டு பிளசிஸ் 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மூன்றாவது வரிசையில் களமிறங்கிய அபிஷேக் பொரேல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த ஜேக் பிரேசர் 38 ரன்னில் அவுட் ஆனார்.
இதையும் படிங்க:17 வருடங்கள் காத்திருந்து.. டெல்லி செய்த தரமான சம்பவம்.. ஹைதராபாத்துக்கு நடந்த சோகம்
தனது முதல் போட்டியில் களமிறங்கிய கேஎல் ராகுல் 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வெளியேறினாலும் ஸ்டெப்ஸ் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தார். ஸ்டெப்ஸ் 14 பந்துகளில் 21 ரன்கள் மற்றும் அபிஷேக் பொரேல் 18 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 34 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதனால் 16 ஓவர்களிலேயே 166 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.






