528 ரன்.. 2 அணிகளும் ரன் மழை.. இஷான் கிஷான் சாம்சன் அபாரம்.. 44 ரன்னில் ராஜஸ்தானை வீழ்த்தி சன்ரைசர்ஸ் வெற்றி

0
363

இன்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இதில் சிறப்பாக விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

ஹைதராபாத் ராஜஸ்தான் அணிகள் மோதல்

ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய ஹைதராபாத் அணிக்கு ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார்கள். 3.1 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்த நிலையில் அபிஷேக் ஷர்மா 11 பந்துகளில் 24 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பிறகு ஹெட் மற்றும் இசான் கிஷான் ஜோடி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்கள். இந்த இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 39 பந்துகளில் 85 ரன்கள் குவித்தது.

இதில் 31 பந்துகளை எதிர்கொண்ட ஹெட் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 67 ரன்கள் குவித்து வெளியேறினார். மற்றொரு முனையில் அதிரடியாக விளையாடிய இஷான் கிசான் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 47 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸ் என 106 ரன்கள் குவித்தார். மேலும் நிதிஷ்குமார் ரெட்டி 30 ரன், கிளாஸன் 34 ரன்கள் குவிக்க ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது. இதில் ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர் 4 ஓவர்களில் 76 ரன்கள் விட்டுக் கொடுத்து தனது மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார்.

- Advertisement -

சன்ரைசர்ஸ் சிறப்பான வெற்றி

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. எதிர்பாராத விதமாக தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரியான் பராக் 4, நித்திஷ் ராணா 11 ரன்னில் ஏமாற்றம் அளிக்க, அதற்குப் பிறகு களம் இறங்கிய துருவ் ஜூரேல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 35 பந்துகளில் 5 போர் 6 சிக்ஸ் என 70 ரன்கள் எடுத்து வெளியேற, சாம்சன் 37 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க:18 வருட ஐபிஎல் வரலாறு.. ஆர்ச்சருக்கு நடந்த சோகம்.. மறக்க முடியாத மோசமான சாதனை

அதற்குப் பின்னர் ஹெட்மயர் 42 ரன்கள், சுபம் தூபே 11 பந்தில் 34 ரன்கள் குவித்தாலும் அதிக ரன்களால் இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் மட்டும் குவித்தது. இதனால் சன் ரைசர்ஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் மட்டும் இரண்டு அணிகளும் சேர்த்து 528 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இறுதியில் சன்ரைசர்ஸ் அணி முதல் வெற்றியும் ராஜஸ்தான் அணி தனது முதல் தோல்வியும் பதிவு செய்தது.

- Advertisement -