18 வருட ஐபிஎல் வரலாறு.. ஆர்ச்சருக்கு நடந்த சோகம்.. மறக்க முடியாத மோசமான சாதனை

0
290
Archer

இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பவுலர் ஜோப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மோசமான சாதனைக்கு பரிதாபகரமாக சொந்தக்காரராகி இருக்கிறார்.

நடப்பு 18 ஆவது ஐபிஎல் சீசனின் இரண்டாவது நாளில் இன்று முதல் போட்டியில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

- Advertisement -

அலறவிட்ட ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள்

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா 11 பந்தில் 24 ரன்கள், டிராவிஸ் ஹெட் 31 பந்தில் 67 ரன்கள், நிதீஷ் குமார் ரெட்டி 15 பந்தில் 30 ரன்கள், ஹென்றி கிளாசன் 14 பந்தில் 34 ரன்கள் என அதிரடியாக விளையாடி ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதைத் தொடர்ந்து ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக வந்த இந்திய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இசான் கிசான் 45 பந்தில், குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் சிக்ஸர்களாக பறக்க விட்டு சதம் அடித்து அசத்தினார். ஆட்டம் இழக்காமல் நின்ற அவர் 47 பந்தில் 106 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது.

- Advertisement -

ஜோப்ரா ஆர்ச்சர் மோசமான சாதனை

இந்த போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் மொத்தம் நான்கு ஓவர்கள் பந்து வீசி 76 ரன்கள் விட்டுக் கொடுத்தார். குறிப்பாக இசான் கிஷான் இடம் இவரது பந்துவீச்சு செல்லுபடி ஆகவில்லை. உள்நாட்டு வீரரை விளையாடுவது போல ஹைதராபாத் வீரர்கள் நாலாபுறங்களிலும் அடித்து நொறுக்கினார்கள்.

இதன் காரணமாக 18 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த பவுலர் என்கின்ற மோசமான சாதனையை படைத்தார். காயத்திற்கு பிறகு திரும்பி வந்திருக்கும் ஆர்ச்சர் பந்துவீச்சில் வேகம் இருந்தாலும் பழைய தாக்கத்தை பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 286-6.. ஐந்தில் நான்கு.. இஷான் கிஷான் ருத்ர தாண்டவ சதம்.. ஹைதராபாத் மெகா ரெக்கார்ட்.. பரிதாப ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன் தந்த பவுலர்:

0/76- ஜோஃப்ரா ஆர்ச்சர் ( ராஜஸ்தான்) ஹைதராபாத்.
0/73- மோஹித் ஷர்மா (ஜிடி) எதிராக டிசி, டெல்லி, 2024.
0/70 – பசில் தம்பி ( ஹைதராபாத்) எதிராக பெங்களூரு, 2018.
0/69 – யாஷ் தயாள் (ஜிடி) எதிராக கேகேஆர், அகமதாபாத், 2023.
1/68 – ரீஸ் டாப்லி ( பெங்களூரு) எதிராக SRH, பெங்களூரு, 2024.
1/68 – லூக் வூட் ( மும்பை) எதிராக டெல்லி, 2024.

- Advertisement -