எஸ்ஏ20.. 3 பந்து 7 ரன்.. போராடிய சாம் கரன்.. மும்பை இந்தியன்ஸ் கேப் டவுனை வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்

0
667

தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் பிரான்சிஸைஸ் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இதில் பங்கு பெரும் ஆறு அணிகளை, ஐபிஎல் தொடரில் ஆறு அணிகளை வாங்கி இருக்கும் உரிமையாளர்கள் வாங்கி இருக்கிறார்கள்.

நேற்று இரவு இந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் டாஸ் வென்று தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

- Advertisement -

இந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக இங்கிலாந்தின் டேவிட் மலான் மற்றும் ஜோர்டன் ஹெர்மான் இருவரும் களமிறங்கினார்கள். இந்த ஜோடி மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது.

டேவிட் மலான் 37 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்து அசத்தியது. அடுத்து வந்த கேப்டன் மார்க்ரம் 19, ஸ்டப்ஸ் 11* ரன்கள் எடுத்தார்கள்.

கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்ற ஜோர்டன் ஹெர்மான் 62 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 106 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதியில் சன் ரைசர்ஸ் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன் தரப்பில் கேப்டன் பொல்லார்ட் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ரியான் ரிக்கல்ட்டன் 58(33), வான்டர் டேசன் 41(28) என முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவர்களில் 108 ரன் குவித்து அசத்தினார்கள்.

இதற்கு அடுத்து வந்த டிவால்ட் பிரிவியஸ் 8, லியாம் லிவிங்ஸ்டன் 2, கீரன் பொல்லார்ட் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். வெற்றிக்காக இங்கிலாந்து அணியின் சாம் கரன் கடைசி வரையில் போராடினார்.

கடைசி இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. 20வது ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணியால் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி மூன்று பந்துகளுக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்ட பொழுது இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வெற்றிக்காக போராடிய சாம் கரன் 22 பந்தில் 37 ரன்கள் எடுத்தார்.

இதனால் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணியை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த அணியின் ஓட்டுநியில் பார்ட்மேன் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.