தோனிக்கு எதிரா கண்டிப்பா நான் அத பண்ண மாட்டேன் – சிஎஸ்கே போட்டிக்கு முன் பேட் கம்மின்ஸ் பேட்டி

0
1230

ஐபிஎல் தொடரில் இன்று நடக்க இருக்கிற 18-வது போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. வலுவான இந்த இரண்டு அணிகள் மோதுவதால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் சன்ரைசர்ஸ் அணியின் பேட் கம்மின்ஸ் மகேந்திர சிங் தோனியை பற்றி வெளிப்படையான ஒரு கருத்தை கூறியிருக்கிறார்.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெறும் இப் போட்டியில் இரண்டு அணிகளுமே மிகத் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர். ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக டில்லி அணியிடமும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குஜராத் அணியிடமும் தோல்வியை தழுவி இருக்கின்றன. எனவே இந்த இரண்டு அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெற்று வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்கும்.

- Advertisement -

சென்னை அணியை பொறுத்தவரையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் வலுவாக காணப்படுகிறது. இருப்பினும் கடைசியாக நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே கோட்டை விட்டது. மேலும் சென்னை அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிகுர் ரகுமான் அடுத்த மாதம் நடைபெற இருக்கிற உலக கோப்பை காரணமாக விசாவை புதுப்பிக்க வங்காளதேசம் சென்றுள்ளதால் அவரது இடத்தை நிரப்ப வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் எம் எஸ் தோனி தற்போது நல்ல பார்மில் இருப்பதால் அவர் பேட்டிங் வரிசையில் முன்னரே களமிறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சென்னை அணியை போன்று வலுவாக உள்ளது. சன்ரைசர்ஸ் அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கிளாசன் இந்தப் போட்டியிலும் தனது அதிரடியை வெளிக்காட்டுவார்.

தோனி பற்றி பேசிய பேட் கம்மின்ஸ்

எனவே இந்த போட்டி இரண்டு அணிகளுக்குமே முக்கியமாக பார்க்கப்படும் வேளையில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் எம் எஸ் தோனியை போன்ற ஒருவரை தன்னால் மிஞ்ச முடியாது என்றும், வரவிருக்கிற போட்டியில் தன்னால் முடிந்ததை செய்வேன் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“ஒரு கேப்டனாக என்னுடைய வேலை என்னவென்றால் எனது அணி வீரர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை பெறுவது மட்டுமே.

- Advertisement -

வெளிப்படையாகக் கூறினால் எதிர் அணியினர் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள். ஆனால் மகேந்திர சிங் தோனியை போன்ற ஒருவரை என்னால் தந்திரமாக மிஞ்ச முடியும் என்று நான் நினைக்கவில்லை. அதனால் அவரை புத்திசாலித்தனமாக முந்த முயற்சி எதுவும் பண்ண மாட்டேன். தோனி ஒரு மகத்தான வீரர். எனவே உங்கள் அணி வீரர்களிடம் இருந்து சிறந்ததை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். அதுவே முழுமையாக வேலை செய்யும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: 3 கோடி கட்டாததால் கட்டான கரண்ட்.. சிஎஸ்கே ஹைதராபாத் போட்டிக்கு வந்த சிக்கல்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மகேந்திர சிங் தோனியைப் பற்றி புகழாரம் சூட்டியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. எனவே அவர் பேட்டியளித்த இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.