சுனில் கவாஸ்கர் தேர்ந்தெடுத்துள்ள அன் கேப்டு இளம் இந்திய வீரர்கள் கொண்ட ஐபிஎல் அணி

0
688
Sunil Gavaskar and Rahul Tripathi

2022 ஐ.பி.எல் சீசன் அதன் சுவாரசியத்தின் இறுதிக்கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. இந்த ஐ.பி.எல் தொடரில் இரு புதிய அணிகள் இணைந்திருப்பது, நிறைய புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறது. இந்திய இளம் வீரர்கள் தாண்டி, டிவால்ட் பிரிவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போன்ற இளம் வெளிநாட்டு வீரர்களுக்கும் வாய்ப்பளித்திருக்கிறது.

இது ஒரு புறத்தில் நல்ல விசயமாக இருந்தாலும், இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட்கோலி, ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட் போன்றோரின் பேட்டிங் பார்ம் இந்திய கிரிக்கெட் தேர்வாளர்களுக்கு கவலையளிக்கும் விசயமாக இருக்கிறது. அதேசமயத்தில் இந்த ஐ.பி.எல் தொடரில் ஜொலித்து வரும் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் யார் யாருக்கு வாய்ப்பு தருவதென்பது இந்திய கிரிக்கெட் தேர்வாளர்களுக்குப் பெரிய சவாலான பணியாகவே இருக்கும்.

- Advertisement -

ஜாகீர்கான், நெக்ராவிற்கு பிறகு இந்திய அணிக்குச் சரியான இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லையென்பது, ஒரு பெரிய குறையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஐ.பி.எல்-ல் அர்ஷ்தீப் சிங், யாஷ் தயால், மோசின் கான், முகேஷ் சவுத்ரி என மூன்று சிறப்பான இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். இதில்லாமல் ஆறு பந்துகளையும் யார்க்கர்களாக வீசும் நடராஜனும் காயத்திலிருந்து திரும்பியதோடு, பவர்-ப்ளேவில் சிறப்பாகப் பந்துவீசும் திறனையும் வளர்த்தி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இல்லாமல் தன் வேகத்தால் உலகின் பல வீரர்களின் கவனத்தைப் பெற்றுள்ள உம்ரான் மாலிக் ஒருபுறம் இந்திய அணிக்கான வாய்ப்பில் நெருக்கமாக நிற்கிறார்!

இந்த நிலையில் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனும், கிரிக்கெட் எக்ஸ்பர்ஸ்ட்சுமான இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் அன்கேப்படு இந்திய வீரர்களை வைத்து ஒரு ஐ.பி.எல் அணியை வெளியிட்டு இருக்கிறார். அவரது அன்கேப்படு இன்டியன் ஐ.பி.எல் அணி தரமான அணியாகவே தெரிகிறது.

சுனில் கவாஸ்கர் அவர்களின் அன்கேப்படு இன்டியன் ஐ.பி.எல் அணி

அபிஷேக் சர்மா
ராகுல் திரிபாதி
திலக் வர்மா
ரஜத் பட்டிதார்
மகிபால் லோம்ரர்
ஜிதேஷ் சர்மா
சபாஸ் அகமத்
முருகன் அஷ்வின்
உம்ரான் மாலிக்
மோசின் கான்
முகேஷ் சவுத்ரி

- Advertisement -