கையை சோக் செய்து பவுலிங்.. பந்துவீச்சில் முறைகேடு செய்த சுனில் நரேன்.. வசமாக சிக்கிய ஆதாரம் – வைரலாகும் வீடியோ!

0
2398

ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியில் சுனில் நரேன் பவுலிங் செய்த விதம் முறைகேடானது என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆதாரங்களும் சாதகமாக இருப்பதாக தெரிகிறது. வீடியோ ஆதாரம் கீழே உள்ளது.

கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டது. பெங்களூரு அணி முதலில் பவுலிங் செய்தது.

- Advertisement -

கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. சர்துல் தாக்கூர், குர்பாஸ், ரிங்கு சிங் ஆகியோர் அபாரமாக செயல்பட்டதால், 89 ரன்களுக்கு 5 விக்கெடுகளை இழந்த சரிவிலிருந்து மீண்டு கொல்கத்தா அணியால் 200+ ரன்களை கடக்க முடிந்தது.

அதன்பிறகு இமாலய இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு நல்லது துவக்கம் கிடைத்தாலும், சுனில் நரேன் பந்தில் விராட் கோலி போல்டாகி வெளியேறிய பிறகு ஆர்சிபி அணி நோக்கி சென்றது. அதன் பிறகு வரிசையாக விக்கெடுகளை இழந்து 96 ரன்களுக்கு 9 விக்கெட் விழுந்தது.

கடைசியில் சிறிது பார்ட்னர்ஷிப் அமைந்து 123 ரன்கள் வரை சென்று ஆல் அவுட் ஆனது பெங்களூரு அணி. இதன் மூலம் 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இப்போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை சுனில் நரேன் எடுத்தது திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் சுனில் நரேன் இப்போட்டியில் செய்த பந்துவீச்சு ஆக்சன் முறைகேடானது. கையை சோக் செய்து பந்துவீசினார் என்று கூறி, இதற்கான வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்து, பிசிசிஐ இடம் புகார் அளித்திருக்கிறது உரிய தரப்பு.

சுனில் நரேன் ஏற்கனவே இதுபோன்ற பந்துவீச்சு முறைகேட்டில் தண்டனை பெற்றுள்ளார். முறைகேடான பந்துவீச்சு ஆக்சன் என்று கடந்த காலங்களில் உறுதியானதால் சில மாதங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இவர் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர் பந்துவீச்சு ஆக்சனை சரி செய்துகொண்டு ஐசிசி நிபுணர்கள் முன்பு பரிசோதனையில் தேர்ச்சி பெற்றார். அதன்பிறகே மீண்டும் பந்துவீச்சில் ஈடுபட்டார் சுனில் நரேன். இப்போது மீண்டும் இவர் மீது சர்ச்சை எழுந்திருக்கிறது.

வீடியோ ஆதாரத்தில் ஏறக்குறைய கையை சோக் செய்தது போலவே தெரிகிறது. பிசிசிஐ இதற்கு என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதன் வீடியோ கீழே: