ஜெய்ஸ்வால் தடுமாறுவது இதனால்தான்.. ஆனால் அவர் பேட் சீக்கிரமா பேச போகுது – கவாஸ்கர் கருத்து

0
40
Jaiswal

ஐபிஎல் 17ஆவது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாட்டு இருக்கும் நான்கு போட்டிகளில் நான்கையும் வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. அதே சமயத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் நான்கு போட்டிகளில் 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இது குறித்து கவலைப்பட வேண்டாம் என கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

ஜெய்ஸ்வால் முதல் நான்கு போட்டிகளில் நடப்பு ஐபிஎல் தொடரில் 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஐந்தாவது போட்டியில் 19 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்று பெரிய ரன்னுக்கு செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.

- Advertisement -

ஏப்ரல் கடைசியில் டி20 உலக கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கிறது. யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டாலும், அப்படி முடிவு செய்யப்பட்டவர்களில் யார் ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடுகிறார்களோ அவர்கள் நீக்கப்பட்டு விடுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. இதன் காரணமாக திடீரென ஜெய்ஸ்வாலின் இடம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இந்த முறை இந்திய இளம் வீரர் ரியான் பராக் விராட் கோலி உடன் ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் கடுமையாக மோதி வருகிறார். இன்று குஜராத் அணிக்கு எதிராக 48 பந்தில் 76 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் இவருக்கு இந்த ஐபிஎல் தொடரில் மூன்றாவது அரைசதம் ஆகும்.

தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “ரியான் பராக் தற்பொழுது நான்காவது இடத்தில் வந்து மிக நன்றாக ரன்கள் எடுத்து வருகிறார். அதே சமயத்தின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ஸ்வால் ரன்கள் எடுக்கவேண்டும் என்பதில் மிக விருப்பமாகவும் தெளிவாகவும் இருக்கும். அவர் மிகவும் வெற்றிகரமான ஒரு டெஸ்ட் தொடரில் இருந்து திரும்பி இருக்கிறார். இதன் காரணமாக அவரால் டி20 கிரிக்கெட் விளையாட உடனே மாறுவது கடினமாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : கடைசி 15 டி20 போட்டி.. 10 அரை சதம்.. ரியான் பராக் வெறித்தனமான பேட்டிங்.. 78 பந்தில் 130 ரன் பார்ட்னர்ஷிப்

சீக்கிரத்தில் ஜெய்ஸ்வால் சிறப்பாக வந்து விடுவார். இன்னும் பத்து போட்டிகள் இருக்கிறது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றிலும் விளையாடும். எனவே ஜெய்ஸ்வால் பேட்டிங் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கவலைப்படும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் விரைவில் ஜெய்ஸ்வால் பேட் மிக சத்தமாக பேசப்போகிறது” என்று கூறியிருக்கிறார்