“ஐபிஎல்-ல 0 ரன் அடிச்சாலும்.. இவருக்கு டி20 உலக கோப்பையில் இடம் தரணும்” – கவாஸ்கர் அதிரடி கருத்து

0
997

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. உலகக் கோப்பை தோல்விக்குப் பின்னர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி இருந்தது.

அடுத்த வருடம் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்குத் தயாராகும் விதமாக விளையாடி வரும் இந்திய அணிக்கு அடுத்த விக்கெட் கீப்பர் யார் என்ற சந்தேகம் நிலவுகிறது. 50 ஓவர் உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பிங் செய்த கேஎல் ராகுல் டி20 உலகக் கோப்பையில் கீப்பிங் பணியை மேற்கொள்வாரா என்பது சந்தேகம் தான்.

- Advertisement -

முழு நேர விக்கெட் கீப்பரான இஷான் கிஷான் ஐபில்லில் நன்றாக விளையாடினாலும் சர்வதேச தொடர்களில் பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். பஞ்சாப் அணியில் நன்றாக விளையாடி தற்போது வாய்ப்பு கிடைத்துள்ள ஜித்தேஷ் சர்மாவும் பெரிய அளவில் இன்னும் சோபிக்கவில்லை. காயத்திலிருந்து மீண்டு வரும் ரிஷப் பந்த் முழு உடற்தகுதியை அடைவாரா? இல்லையா? என்பது குறித்துத் தெரிய வில்லை.

தற்போது வெளிவந்துள்ள செய்திகளின் அடிப்படையில் ரிஷப் பந்த் வரும் ஐபிஎல்லில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இம்பாக்ட் பிளேயர் என்னும் விதிமுறையை பயன்படுத்தி விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ளாவிட்டாலும் பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்று தெரிகிறது.

ஐபிஎல் தொடங்க இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் அவர் விரைவில் குணமாகி விளையாட வேண்டுமென ரசிகர்கள் விரும்புகிறார்கள். எனவே ரிஷப் பந்த் விளையாடுவது குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில்

- Advertisement -

” அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ரிஷப் பந்த் கண்டிப்பாக விளையாடுவார் . ஐபிஎல்-இல் காயம் ஏதுமின்றி முழு உடல் தகுதியுடன் மட்டும் ஆடினால் போதும், அவர் ஒரு ரன் இல்லை 0 ரன் அடித்திருந்தாலும் இந்திய t20 உலக கோப்பை அணியில் இருப்பார். ரிஷப் பந்த் ஒரு கேம் சேஞ்சர். நான் ஒருவேளை தேர்வுக் குழுவில் இருந்திருந்தால் நான் தேர்வு செய்யும் முதல் இரண்டு வீரர்களில் இவர் கண்டிப்பாக இருப்பார்.”

எந்த நேரத்திலும் ஆட்டத்தை மாற்றக்கூடிய திறன் கொண்டவர். அவர் வரும் ஐபிஎல்லில் தனது உடற்பகுதியை நிரூபிப்பார் என்று நம்புகிறேன். காயங்கள் இல்லாமல் விளையாடினால் அவர் இந்திய அணிக்குள் வருவதற்கான முழு தகுதியும் பெற்று விடுவார். அவர் ஐபிஎல்லில் நன்றாக விளையாடுகிறார் அல்லது இல்லை என்பதைத் தாண்டி டி20 உலகக் கோப்பையில் நிச்சயம் தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று கூறுகிறார்.

டெஸ்ட் தொடரில் நன்றாக விளையாடும் ரிஷப் பந்த் சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே அவர் டி20 உலக கோப்பையில் விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.