கேஎல் ராகுலுக்கு ஏன் இத செஞ்சீங்க.. உங்களால அவரும் இப்போ மாட்டிக்கிட்டாரு – ரோஹித் மீது கவாஸ்கர் விமர்சனம்

0
120

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஆர்டர் குறித்து தனது விமர்சனத்தை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட்

ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியோடு இணைந்த நிலையில் பேட்டிங் ஆர்டரில் ஆறாவது வரிசையில் களமிறங்கி விளையாடினார். தொடக்க வரிசையில் கேஎல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் கூட்டணி சிறப்பாக விளையாடி வந்ததால் ரோகித் சர்மா தொடக்க இடத்தை கலைக்கவில்லை. ஆனால் ஆறாவது இடம் ரோகித் சர்மாவுக்கு செட் ஆகாத காரணத்தினால் நான்காவது போட்டியில் தொடக்க வரிசைக்கு மாறினார்.

இருப்பினும் கடந்த போட்டியில் அதுவும் ரோஹித் சர்மாவுக்கு சரியாக கை கொடுக்கவில்லை. நான்காவது போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருக்கிறது. மேலும் இதுவரை தொடக்க இடத்தில் விளையாடி வந்த கேஎல் ராகுல் ரோகித் சர்மா தொடக்க வரிசையில் களமிறங்கியதால் மூன்றாவது வரிசைக்கு மாற்றப்பட்டார். இதனால் அவரும் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ரோகித் சர்மா குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ரோஹித் சர்மா செய்த தவறு

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ரோகித் சர்மா தொடக்க வரிசையை மாற்றியதற்கு ஒரு நல்ல காரணம் இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இல்லை. பிரிஸ்பேன் அல்லது அடிலெய்டு டெஸ்டில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடியிருந்தால் தனக்கு பேட்டிங் நன்றாக செட் ஆகிவிட்டது என்று தொடக்க வரிசையில் மீண்டும் களம் இறங்கி இருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதில் அரைசதத்தை மறந்து விடுங்கள்.

இதையும் படிங்க:ரிஷப் பண்ட் செஞ்சதுக்கு என்ன பேசறதுனு தெரியல.. ஆனா இத செஞ்சுதான் ஆகணும் – ரோகித் சர்மா பேட்டி

பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா ஆறாவது வரிசையில் களமிறங்கி 30 முதல் 40 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றிகரமான தொடக்க கூட்டணிக்கு இடையூறு ஏற்படும் என்று கூறி இருக்கலாம். ஆனால் பெர்த் டெஸ்ட் போட்டியில் தொடக்க ஜோடி இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே சிறப்பாக விளையாடியது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அப்போது ஜெய்ஸ்வால் மட்டுமே ஆட்டம் இழந்தார். கேஎல் ராகுல் மீது தவறு இல்லை மூன்று போட்டிகளிலுமே ராகுல் சிறப்பாக பேட்டிங் செய்திருக்கிறார்” என்று சொல்லில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -