ஆஸ்திரேலியா எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைவதற்கு ரிஷப்மென்ட் முக்கிய ஒரு காரணமாக இருந்திருக்கிறார். தற்போது இந்த தோல்விக்கு பிறகு அவர் குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி அளித்திருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போர்ன் மைதானத்தில் பாக்ஸிங் டே டெஸ்ட் சில நாட்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்றது. இன்று போட்டியின் கடைசி நாளில் டிரா செய்ய இருந்த அருமையான வாய்ப்பை இந்திய அணி தவற விட்டு தோல்வி அடைந்தது.
ரிஷப் பண்டின் இரண்டு இன்னிங்ஸ் மெகா தவறு
இந்த குறிப்பிட்ட டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் தனக்கு பின்புறமாக இரண்டு பில்டர்கள் தூரத்தில் நிறுத்தப்பட்ட பொழுதும் கூட, அணியின் நிலைமை மோசமாக இருந்தும், சிக்ஸர் அடிப்பதற்கு முயற்சி செய்து ஆட்டம் இழந்து வெறுப்பேற்றினார். பிறகு நிதிஷ்குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் காப்பாற்றினார்கள்.
இன்று மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் டிரா செய்வதை நோக்கி விளையாடிய பொழுது, தேவையில்லாமல் சிக்ஸர் அடிப்பதற்கு சென்று விக்கெட்டை இழந்தார். அதைத்தொடர்ந்து இந்திய அணி வெறும் 34 ரன்கள் மட்டுமே சேர்த்து 6 விக்கெட் இழந்து தோற்றது. இந்திய அணியின் இந்த தோல்வியில் அவரது ஷாட் செலக்சன், பொறுப்பற்ற ஆட்டம் முக்கிய காரணமாக இருக்கிறது.
ரிஷப் பண்டிடம் எப்படி பேசுவதென்று தெரியவில்லை
இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது “இந்த போட்டியின் முடிவு குறித்து அனைவரும் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். ரிஷப் பண்ட் ஆட்டம் குறித்து அவரிடம் நாம் பேசுவதை விட முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் அவர் நிறைய வெற்றிகளை கொடுத்து இருக்கிறார். எனவே ஒரு கேப்டனாக எனக்கு கலவையான மனநிலை இருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு சமநிலையுடன் இருக்க வேண்டும்”
இதையும் படிங்க : 186 ரன்.. மீண்டும் கடைசியில் கோட்டை விட்ட இலங்கை அணி.. நியூஸி அபார வெற்றி.. தொடரை வென்றது
“அவர் நிறைய வெற்றிகளை கொடுத்திருப்பதால் அவருடைய ஷாட் செலெக்ஷன் மோசமாக இருப்பது குறித்து அவரிடம் பேச ஒரு கேப்டனாக கடினமாக இருக்கிறது. ரிஸ்க் மிக அதிகமாக இருக்கும் பொழுது, அதை கையில் எடுக்க விரும்புகிறீர்களா? அவர் கிரிக்கெட்டை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது? என்பதை பற்றி அவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை” என்று கூறி இருக்கிறார்.






