இந்திய அணி இல்லை.. சாம்பியன்ஸ் ட்ராபியில் சவாலான அணி இதுதான் – சுனில் கவாஸ்கர் கணிப்பு

0
156

பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி மாதம் முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் 15 பேர் கொண்ட வீரர்களை அறிவித்தது. இதில் இந்திய அணியும் இன்று அறிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடினமான அணி குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர்

1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆசியாவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் பாகிஸ்தான் அணி கடைசியாக இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இருந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணி தொடரை நடத்த இருக்கிறது. இதில் எட்டு வலுவான அணிகள் கலந்து கொள்ள இருப்பதால் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களுக்கு உற்சாகமும் சுவாரசியமும் கலந்த பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில் கோப்பையை வெல்வதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இருக்கின்ற நிலையில், இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது வித்தியாசமான கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கிறார். அதாவது சொந்த மண்ணில் தொடரை நடத்த உள்ள எந்த ஒரு அணியுமே கடினமாக இருக்கும் என்பதால் இந்த தொடர் பாகிஸ்தான் அணி மற்றும் அணிகளுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று சில கருத்துக்களை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

- Advertisement -

சுனில் கவாஸ்கர் கூறிய வலுவான அணி

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சொந்த மண்ணில் எந்த அணியும் வீழ்த்துவது என்பது எளிதான காரியம் அல்ல. இதனால் பாகிஸ்தான் அணிக்கு பேவரைட் என்கிற பட்டம் கொடுக்கப்பட வேண்டும். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. ஆனால் அதற்கு முன்பாக இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு 10 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஒரே நாளில் 19 விக்கெட்.. பரிதாப வெஸ்ட் இண்டீஸ்.. அசத்திய பாகிஸ்தான் அணி ஸ்பின்னர்ஸ் – முதல் டெஸ்ட்

எனவே வரவிருக்கும் போட்டிகளுக்கு பாகிஸ்தான் அணிதான் முன்னுரிமை பெறும் என தோன்றுகிறது” என சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். பாகிஸ்தான் அணியும் முன்பை விட தற்போது முகமது ரிஸ்வான் தலைமையில் வலுவான அணியாக திகழ்கிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த தொடரில் பாகிஸ்தான் அணி முன்னுரிமை பெறும் என்று சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -