கோலி ரோஹித் சர்மா இருந்தாதான் இந்திய அணி ஜெயிக்குமா.? அவங்களுக்கு என்னோட பதில் இதுதான் – சுனில் கவாஸ்கர்

0
88

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்தும் இந்திய அணி குறித்தும் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடர்

துபாய் ஆடுகளத்தில் விளையாடிய இந்திய அணி முதலில் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று அதற்கு பின்னர் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி என அனைத்திலும் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இதில் துபாய் ஆடுகளம் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது என்றும், பல விமர்சனங்கள் வந்தாலும் அதற்கு தகுந்த கருத்துக்களை இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் கூறினர்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், தற்போது இருக்கும் இந்திய அணியை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இல்லாத காலகட்டத்தில் கூட இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது எனவும் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார். மேலும் தற்போது இந்திய அணி தோற்கடிக்க முடியாத அணியாக இருப்பதாகவும் கூறி மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.

- Advertisement -

சுனில் கவாஸ்கர் கருத்து

இதுகுறித்து கவாஸ்கர் கூறும்போது ” சாம்பியன்ஸ் டிராபியில் கிடைத்த வெற்றி, அதுவும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா இல்லாமல் கிடைத்த வெற்றியை பார்க்கும்போது இந்திய அணியில் யாரும் இன்றியமையாதவர்களாக இருக்கிறார்கள் என்பதை வலியுறுத்துகிறது. அதாவது அணியில் அனைவரும் வலுவாக இருக்கிறார்கள் என்று வெளிப்படுத்துகிறது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாத காலகட்டத்தில் கூட இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் அணியில் இருந்தால் இன்னும் வெல்ல முடியாத தோற்றத்தை மற்ற அணிக்கு கொடுக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

இதையும் படிங்க:நிறைய சான்ஸ் குடுப்பார்னு சொல்றாங்க.. அந்த கேப்டனின் கீழ் விளையாடனும்னு ஆசையா இருக்கு – பஞ்சாப் ஸ்டார் வீரர்

இப்போது பல வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் வந்து துபாயில் மட்டும் கிடையாது, இந்திய அணி வேறு எங்கு விளையாடி இருந்தாலும் வெற்றி பெற்றிருக்கும் என்று கூறுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று சுனில் கவாஸ்கர் பேசி இருக்கிறார். இந்திய அணி வீரர்கள் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விளையாட உள்ள நிலையில் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதிலும் வெற்றி பெற்று இந்திய அணி தனது வலிமையை வெளிநாட்டில் நிலைநாட்ட முயற்சிக்கும்.

- Advertisement -