ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் முதல் போட்டியாக பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் வருகிற சனிக்கிழமை விளையாட உள்ளன.
இந்த சூழ்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் கிரிக்கெட்டில் தனது முக்கிய ஆசை நிறைவேற வேண்டும் என்ற சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா
கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தவறுதலாக எடுக்கப்பட்ட உள்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷஷாங்க் சிங், தொடரின் இறுதியில் கதாநாயகனாக உருவெடுத்து தக்கவைக்கப்பட்ட வீரராக மாறினார். மிடில் ஆர்டரில் களமிறங்கி தனது அதிரடியின் மூலமாக வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிடில் வரிசையில் களமிறங்கி 354 ரன்கள் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக 68 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பஞ்சாப் அணி வலுவாக களமிறங்க உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் நல்ல நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஷசாங்க் சிங் ஒருமுறையாவது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இவரின் கீழ் நான் விளையாட வேண்டும்
இதுகுறித்து அவர் கூறும் போது “ரோகித் பாய் தனது வீரர்களுக்கு முழு ஆதரவு அளிப்பார் நிறைய வாய்ப்புகளை வழங்குவார் என்று கூறுகிறார்கள். ரோகித் சர்மா மிகவும் புத்திசாலி கேப்டன், மேலும் களத்தில் அவர் ஒற்றைப்படை வசனங்களும் வேடிக்கையானவை. நான் மிகவும் விளையாட விரும்பும் கேப்டனை கேட்டால் அது நிச்சயம் ரோஹித் சர்மா ஆகத்தான் இருக்கும். அவர் பம்பாயை சேர்ந்தவர்.
இதையும் படிங்க:2023 சிஎஸ்கே செஞ்சத மறக்கவே முடியாது.. எல்லாமே என் தலையெழுத்து.. 100க்கு 95 முறை – மோகித் சர்மா பேட்டி
நானும் அவரும் ஒரு முறை இணைந்து பேட்டிங் செய்திருக்கிறோம். ஆனால் அப்போது அவர் கேப்டனாக இல்லை அவரது தலைமையில் நான் விளையாட விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக இவர் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவ்வாறு கிடைத்தால் ரோஹித் சர்மாவின் கீழ் விளையாட வேண்டும் என்ற இவரது ஆசையும் நிறைவேறலாம். ரோகித் சர்மா விளையாட உள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது ஹர்திக் பாண்டியா கேப்டனாக ஆடியை வழிநடத்த உள்ளார் என்ற விஷயமும் குறிப்பிடத்தக்கது.