இந்திய கிரிக்கெட்

மற்ற கேப்டனுக்கும் பும்ராவுக்கும் இதுதான் வித்தியாசம்.. அவர் வந்தா ஆச்சரியம் இல்லை – சுனில் கவாஸ்கர் கருத்து

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அடுத்த கேப்டன் குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

இந்திய அணியின் அடுத்த கேப்டன்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். ஆனால் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி தோற்கடித்த நிலையில் இரண்டாவது போட்டியில் இருந்து ரோஹித் சர்மா அணியில் இணைய அதற்குப் பிறகு தோல்வி ஆரம்பித்தது. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்த பின்னர் ஐந்தாவது போட்டியில் இருந்து தான் வெளியேறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார்.

இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா காயம் காரணமாக வெளியேற, வெற்றி பெற்றிருக்க வேண்டிய அந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் அடுத்த டெஸ்ட் அணியின் கேப்டனாக பும்ரா இருக்கப் போகிறார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி வரும் நிலையில் அது குறித்து தான் ஆச்சரியப்படவில்லை ஏனென்றால் பும்ரா ஒரு மிக புத்திசாலி வீரர் என்று சுனில் கவாஸ்கர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பும்ராவுக்கு இதை செய்தால் ஆச்சரியப்பட மாட்டேன்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” பும்ரா அடுத்த கேப்டனாக இருப்பார். ஏனென்றால் அவர் முன்னணியில் இருந்து அணியை வழி நடத்துகிறார். அவரிடத்தில் ஒரு கேப்டனுக்கான ஒரு நல்ல காற்று இருக்கிறது. அவர் இந்திய அணியில் அழுத்தம் கொடுக்கும் கேப்டனாக இருக்க மாட்டார். ஏனென்றால் அது போல நிறைய கேப்டன்கள் இருக்கிறார்கள். பும்ராவை பொருத்தவரை மற்றவர்கள் தங்களது வேலையை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

இதையும் படிங்க:WTC பைனல்ல எங்க டீம் இருக்கு.. ஜெயிக்கணும்னா இந்த ஒரு விஷயத்தை மட்டும் செஞ்சா போதும் – க்ரீம் ஸ்மித் பேட்டி

அவர்கள் தேசிய அணியில் இருப்பதால் அவர்களுக்கான வேலையை அவர்கள் சிறப்பாக செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் அவர் அழுத்தம் கொடுக்கக்கூடிய கேப்டனாக இருக்கவில்லை. அவர் மிகவும் புத்திசாலித்தனமான பந்துவீச்சாளராக இருக்கிறார். மிட் ஆஃப் மிட் ஆன் என்று சரியான திசையில் வீசச் சொல்லி பந்தை கொடுக்கிறார். எனவே அவர் மிக புத்திசாலி வீரர் என்று நினைக்கிறேன். இதனால் அவர் அடுத்த கேப்டனாக அறிவிக்கப்பட்டால் நான் அதில் ஆச்சரியப்பட மாட்டேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by