தென் ஆப்பிரிக்கா அணி முதல் முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனான கிரீம் ஸ்மித் இறுதிப்போட்டி குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி
ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக நல்ல முறையிலேயே விளையாடி வருகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பையில் அரை இறுதி வரை முன்னேறி வந்த தென்னாப்பிரிக்க அணி, அதற்கு பிறகு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இறுதி போட்டி வரை வந்து இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது. மேலும் இரு தரப்பு முத்தரப்பு தொடர்களிலும் சிறப்பாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்க அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள தென்னாப்பிரிக்க அணி, அதற்கு அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான கிரீம் ஸ்மித் இறுதிப் போட்டியில் தங்கள் அணி பதட்டம் அடையாமல் தங்கள் வேலையை ஒழுங்காக செய்தாலே முன்னேறலாம் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எனது அறிவுரை இதுதான்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “எங்கள் தென்னாப்பிரிக்க அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. டெஸ்ட் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு தற்போது எங்களுக்கு கிடைத்துள்ளது. தற்போது அதுதான் மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். தென்னாப்பிரிக்க அணி தற்போது இந்த ஒரே ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். அதாவது தங்களது வேலையை பதட்டப்படாமல் நிதானமாக செய்து முடிக்க வேண்டும்.
இதையும் படிங்க:பும்ரா தங்க முட்டையிடும் வாத்து.. பிசிசிஐ அவருக்கு இந்த கௌரவத்தை தரவே தராதிங்க – முகமது கைஃப் பேச்சு
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சென்று பார்த்தால் தென்னாப்பிரிக்க அணி வெற்றி விகிதத்தில் சிறப்பாக விளையாடியிருக்கிறது. அணியின் வெற்றி சதவீதம் மிகவும் ஒழுக்கமான நிலையில் உள்ளது எனவே இதே போன்ற ஆட்டத்தை இறுதிப்போட்டியிலும் கடைபிடிக்க வேண்டும்” என்று ஸ்மித் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






