இந்திய கிரிக்கெட்

சூப்பர் சூப்பர்னு கத்துவேன்.. ஆனா ரிஷப் பண்ட் இதை செய்யணும்.. அவரால கண்டிப்பா முடியும் – கவாஸ்கர் பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா ஐந்தாவது டெஸ்ட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்திய அணி கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு வர்ணனையாளராக செயல்பட்டு வரும் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நான்காவது போட்டியின் முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட் தேவையில்லாத ஷாட் விளையாடி ஆட்டம் இழந்த நிலையில் அவரை முட்டாள் என்று கோபமாக கத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த சூழ்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பதிலாக பும்ரா கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ரிஷப் பண்ட் இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் எப்படி விளையாடினாரோ அதேபோல ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் மீது நம்பிக்கை உள்ளது

இது குறித்து அவர் கூறும் பொழுது “கடந்த முறை இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ரிஷப் பண்ட் வழக்கத்திற்கு மாறான சதம் அடிப்பதை பார்க்க எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. அதை அவர் தற்போது மீண்டும் செய்ய முடியும். தற்போது நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர் இதை செய்தால் அவருக்காக நான் எழுந்து நின்று ‘சூப்பர் சூப்பர்’ என்று கத்துவேன். மக்கள் அதிகாலையில் எழுந்து தங்களுக்கு பிடித்தமான வீரர்கள் விளையாடுவதை பார்ப்பது என்பது மிகப்பெரிய வணிகம் ஆகும்.

இதையும் படிங்க:50 நாளில் சாம்பியன்ஸ் டிராபி 2025.. இதுவரை தயார் ஆகாத மைதானம்.. சிக்கலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

எனவே ஸ்டம்புகளுக்கு பின்னால் திருவிழா போன்று இத்தகைய சூழலில் விளையாடுவது அழுத்தத்தை குறைக்கும். ஆனால் திருவிழா போட்டிகளில் விளையாடுவதைப் போல பேட்டிங் செய்வது சிறந்த வழியாக இருக்காது. எனவே சூழ்நிலையை உணர்ந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே ரிஷப் பண்ட் ஐந்தாவது போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts