50 நாளில் சாம்பியன்ஸ் டிராபி 2025.. இதுவரை தயார் ஆகாத மைதானம்.. சிக்கலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

0
35
Champions Trophy 2025

சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இன்னும் பாகிஸ்தானில் மைதானங்கள் தயாராகாமல் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் இந்த தொடரில் பங்கேற்கிறது.இதில் இந்தியா மட்டும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட மறுப்பு தெரிவித்ததால் ஹைபிரிட் முறைப்படி இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய்க்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

முடியாத மைதான கட்டுமானப் பணிகள்

இந்த சூழலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடைபெற இருப்பதால்,இதனை சிறப்பாக நடத்தி முடிக்க அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்திருக்கிறது. இதனால் பழமையான பாகிஸ்தான் கிரிக்கெட் மைதானங்களை சுமார் 120 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு நவீன வடிவத்தில் மாற்றப்பட்டு வருகிறது.

குறிப்பாக பாகிஸ்தான் நாட்டில் உள்ள முக்கிய மைதானமான லாகூர் மைதானத்தில் பல்வேறு பணிகள் இன்னும் எஞ்சி இருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில் லாகூர் மைதானத்தில் ட்ரெஸ்ஸிங் ரூம் மீடியாவும் மற்றும் பார்வையாளர்கள் மாடம் என அனைத்தும் முடிவடையாமல் இருக்கிறது.

- Advertisement -

லாகூரிலிருந்து மாற்றப்பட்ட போட்டிகள்

இதனால் லாகூர் மைதானத்தில் நடைபெற இருந்த வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் போட்டி தற்போது முல்தான் மைதானத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் லாகூர் மைதானத்தில் நடைபெற இருந்த உள்ளூர் போட்டியையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மாற்றி இருக்கிறது.அவசர கதியில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் அது ரசிகர்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.

இதையும் படிங்க: 44.3 ஓவர் 10 விக்கெட்.. ஜிம்பாப்வே அணி அசத்தல் பவுலிங்.. ரஷித் கானின் ஆப்கான் அணி திணறல்.. 2வது டெஸ்ட்

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை சிறப்பாக நடத்துவதற்காக ஐசிசி பாகிஸ்தானுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் நிதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் போட்டி வரும் பிப்ரவரி 19ஆம் தேதி இதே லாகூர் மைதானத்தில் தான் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானும் நியூசிலாந்து மோதுகிறது. இதனால் அந்த ஆட்டத்திற்குள் மைதானத்தை முழு வீச்சில் தயாராக இரவும் பகலமாக ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -