ஹர்திக் கிடையாது.. ரோகித்துக்கு பிறகு கேப்டன் அந்த பையன்தான்.. இதுல தப்பும் இல்ல – சேவாக் கருத்து

0
2345
Rohit

தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாடுகிறது. மேலும் அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்று இருக்கிறது. ரோகித் சர்மாவுக்கு சர்வதேச டி20 கடைசி தொடராக இதுவே இருக்கலாம். எனவே அவரது காலத்திற்குப் பிறகு இந்திய அணியின் கேப்டனாக வருவதற்கு யார் சரியானவர்? என சேவாக் கூறியிருக்கிறார்.

இப்போதைய நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் மூன்று கிரிக்கெட் பார்மெட்க்கும் மூன்று கேப்டன்களை நியமிக்கவும் தயங்காது என்று தெரிகிறது. ரோஹித் சர்மா விளையாடாவிட்டால் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு தற்காலிகமாக கேஎல்.ராகுல், டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திற்கு ரிஷப் பண்ட், டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு ஹர்திக் பாண்டியா இல்லை சூரியகுமார் என்று போவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணியைத் தேர்வுக்குழு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் மட்டுமே அந்த அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள். இந்த அணிக்கு ஆச்சரியப்படும் விதமாக சுப்மன் கில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

அடுத்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி சொந்த மண்ணில் ஹர்திக் பாண்டியா தலைமையில் சந்திக்கும் என பல கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் கில்தான் அடுத்த இந்திய கேப்டனாக வருவதற்கு தகுதியானவர் என சேவாக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சேவாக் கூறும்போது “சுப்மன் வில் இளம்வீரர் எனவே அவர் நீண்ட காலத்திற்கு விளையாடக் கூடியவர். மேலும் அவர் மூன்று வடிவங்களிலும் விளையாடுவார். கடந்த ஆண்டு அவர் சிறப்பாக விளையாடினார். இந்த முறை அவர் டி20 உலகக்கோப்பை தொடரை தவறவிட்டார். என்னைப் பொறுத்தவரை அவரை உருவாக்குவது சரி. ரோகித் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் பொழுது கில் புதிய கேப்டனாக இருப்பார்.

இதையும் படிங்க : ஐசிசி செய்யும் அந்த வேலை வெறும் கண் துடைப்பு.. டி20 உலக கோப்பை மட்ட பிளேடா இருக்கு – அஸ்வின் விமர்சனம்

ஜிம்பாப்வே தொடருக்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டவர்களை தேர்ந்தெடுத்ததில் எந்தத் தவறும் இல்லை. இவர்கள் ஐபிஎல் தொடர் மட்டும் இல்லாமல் உள்நாட்டு தொடரிலும் சிறப்பாக விளையாடித்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தகுதியானவர்களா இல்லையா என்பதை இப்படியான தொடரில் வைத்துதான் சோதிக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -