டி20 உலக கோப்பையில் இந்த 4 டீம் செமி பைனல் வரும்.. ஆனா இவங்க தான் பைனல் போவாங்க – கவாஸ்கர் கணிப்பு

0
2005
Gavaskar

உலகின் பல நாடுகளுக்கும் கிரிக்கெட்டை கொண்டு செல்லும் பொருட்டு, ஐசிசி இந்த முறை டி20 உலகக் கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடத்துவதோடு மட்டும் இல்லாமல், அமெரிக்காவிலும் சேர்த்து முதல் சுற்றுப் போட்டிகளை நடத்துகிறது. இந்தத் தொடர் வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி ஆரம்பிக்கிறது. இதில் எந்தெந்த அணிகள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு செல்லும் என சுனில் கவாஸ்கர் கணித்திருக்கிறார்.

இந்த முறை ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு அதிக அணிகளை அழைத்து வந்திருக்கிறது. மொத்தம் லீக் சுற்றில் முதலில் 20 அணிகளை கொண்டு நடத்தப்படுகிறது. இதில் 5 அணிகள் வீதம் நான்கு குழுக்கள் பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

- Advertisement -

மேற்கொண்டு அரை இறுதிக்கு அணிகளை கண்டறிய எட்டு அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து நான்கு அணிகள் அரை இறுதிக்கு வருகின்றன. மேற்கொண்டு இறுதிப்போட்டி நடத்தப்பட்டு 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலக சாம்பியன் அணி கண்டறியப்படுகிறது.

இந்த நிலையில் சுனில் கவாஸ்கர் அரை இறுதிக்கு செல்லும் அணிகளாக நான்கு அணிகளை தேர்ந்தெடுத்திருக்கிறார். அதில் முதல் இரண்டு அணிகளாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இருக்கின்றன. அடுத்த இரண்டு அணிகளாக இங்கிலாந்து மற்றும் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இருக்கின்றன.

மேலும் இந்த நான்கு அணிகளில் இருந்து இறுதிப்போட்டியில் சந்தித்துக் கொள்ளும் இரண்டு அணிகளை சுனில் கவாஸ்கர் தேர்ந்தெடுக்கும் பொழுது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த இரண்டு அணிகளும் உறுதியாக இந்த முறை டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் சந்திக்கும் எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க: கோலி பேட்டிங் பற்றி விமர்சனம் பண்ணேன்.. அதுக்கு பிறகு இதையெல்லாம் அனுபவிச்சேன் – சைமன் டால் வருத்தம்

சுனில் கவாஸ்கர் கூறியது போல நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டால், 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்ததற்கு திருப்பிக் கொடுப்பதற்கு வசதியான ஒரு போட்டியாக அமையலாம்!