கோலி பேட்டிங் பற்றி விமர்சனம் பண்ணேன்.. அதுக்கு பிறகு இதையெல்லாம் அனுபவிச்சேன் – சைமன் டால் வருத்தம்

0
1194
Virat

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் விராட் கோலியின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் பற்றி நிறைய விமர்சனங்கள் இருந்தது. இதில் கிரிக்கெட் வர்ணனையாளர் நியூசிலாந்தின் முன்னாள் வீரர் சைமன் டால் முக்கியமானவராக இருந்தார். தற்பொழுது விராட் கோலி பற்றிய விமர்சனங்களுக்கு பிறகு தனக்கு என்ன மாதிரியான விஷயங்கள் நடந்தது? என்று அவர் பேசியிருக்கிறார்.

சைமன் டால் உலகம் முழுக்க நடக்கும் டி20 லீக்குகளுக்கு வர்ணனையாளராக செல்கிறார். இப்படி அவர் கடந்த ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் பாபர் அசாம் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் பற்றி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பாகிஸ்தானில் பாபர் அசாமின் ரசிகர்கள் அவர் ஹோட்டலை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு நெருக்கடியை கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் விராட் கோலி ராஜஸ்தான் அணிக்கு எதிராக 67 பந்துகளில் சதம் அடித்திருந்தார். ஐபிஎல் வரலாற்றில் நிறைய பந்துகள் எடுத்துக்கொண்டு அடிக்கப்பட்ட சதமாக அது பதிவானது. இந்த மெதுவான சதம் குறித்து பல விமர்சனங்கள் இருந்தது.

இதில் சைமன் டால் விமர்சனம் முக்கியமானதாக அமைந்தது. மேலும் அவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விராட் கோலி பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் குறித்து விமர்சனங்கள் செய்திருந்தார். இதற்குப் பிறகு விராட் கோலி பேட்டிங் முறையை மாற்றி அதிரடியாக விளையாடி, 741 ரன்கள் குறித்து ஆரஞ்சு தொப்பியையும் தட்டிக் கொண்டு சென்று விட்டார்.

இதுகுறித்து தற்பொழுது பேசியுள்ள சைமன் டால் கூறும்பொழுது “விராட் கோலி ஆட்டமிழந்துவிட்டால் என்ன செய்வது என்று கவலைப்படும் அளவுக்கு அவர் சிறந்த வீரர். அவரைப் பற்றி எத்தனையோ நல்ல விஷயங்களை நான் பேசி இருக்கிறேன். ஆனால் நான் சொன்ன ஒரு விஷயம் நெகட்டிவ் ஆகவோ அல்லது தவறாகவோ கூட இருக்கலாம். ஆனால் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தது.

- Advertisement -

இதையும் படிங்க: என்னை இந்திய அணிக்கு செலக்ட் பண்ணி தான் ஆகணும் வேற வழி இல்ல.. இதான் காரணம் – ரியான் பராக் பேட்டி

இது எப்பொழுதும் ஒரு தனிப்பட்ட நபரை விமர்சிக்கும் எண்ணம் கிடையாது. இது பொதுவான ஒன்று. இப்படியான விமர்சனங்களுக்கு பின்னால் நான் விராட் கோலி உடன் நல்ல உரையாடலை நடத்தியிருக்கிறேன். டாஸ் நிகழ்வின்போது அவரை நான் பேட்டி எடுத்திருக்கிறேன். போட்டி முடிவுக்கு பின்னால் நான் அவருடன் பேசி இருக்கிறேன். இதேபோல் பாபருடனும் எனக்கு நடந்திருக்கிறது. அப்படி அவருடன் பேசும் பொழுது அவர் குறித்து நான் செய்த விமர்சனத்தை தான் பயிற்சியாளரும் கூறினார் என பாபர் என்னிடம் சொல்லியிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்