INDvsSA.. நான் சொல்ற.. இந்த இந்திய பிளேயிங் XI முதல் டெஸ்டுக்கு செமயா இருக்கும்.. சுனில் கவாஸ்கர் அதிரடி செலக்சன்

0
2346

சவுத் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் நடந்த டி20 தொடரில், ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளும் ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று, தொடர் சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்திய அணி 2-1 என்று கைப்பற்றியது. அடுத்ததாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

1992ஆம் ஆண்டு முதல், 30 ஆண்டுகளாக சவுத் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் போட்டி தொடரை விளையாடி வரும் இந்திய அணி, முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், எம்.எஸ் தோனி, மற்றும் விராட் கோலி போன்ற தலைசிறந்த வீரர்கள் தலைமைப் பொறுப்பேற்று விளையாடியும், சவுத் ஆப்பிரிக்கா மண்ணில், டெஸ்ட் போட்டி தொடரை வெல்ல முடியாத நிலையே இருந்து வருகிறது.

- Advertisement -

சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, பாக்சிங் டே என்று அழைக்கப்படும் டிசம்பர் 26-ம் தேதி செஞ்சூரியனில் தொடங்க உள்ளது. அதிகமான இளம் வீரர்களுடன் டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்கும் சவுத் ஆப்பிரிக்கா அணியை, இந்த முறை இந்திய அணி வீழ்த்தி, சவுத் ஆப்பிரிக்கா மண்ணில், டெஸ்ட் போட்டி தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

ஓய்வு அளிக்கப்பட்டிருந்த, கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் டெஸ்ட் போட்டி தொடரில் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்துள்ளனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இந்த முறை டெஸ்ட் போட்டி தொடரை வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில், பயிற்சி போட்டி மற்றும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், “நான் தேர்வு செய்துள்ள அணியில், பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்கள். சுப்மான் கில், விராட் கோலி, மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரிலும், விக்கெட் கீப்பராக கே.எல் ராகுலும், ஆல்ரவுண்டர் இடத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின், வேக பந்துவீச்சாளர்கள் இடத்தில், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை தேர்வு செய்துள்ளேன். இது வழக்கமான அணிதான். இந்தத் தொடரை வெல்ல ரோஹித் மற்றும் விராட் கோலியின் பங்கு மிக முக்கியமானது” என தெரிவித்தார்.

- Advertisement -

செஞ்சூரியன் ஆடுகளம் வேக பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், தனது பிளேயிங் லெவனில், சுழல் பந்துவீச்சாளரான, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவன்:

ஜெய்ஸ்வால், (கேப்டன்) ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.