ஜெயஸ்வால் கூட உட்கார்ந்து பேசுங்க.. பையனுக்கு இந்த 2 டெக்னிக் பிரச்சனை இருக்கு – கவாஸ்கர் சுட்டிக் காட்டல்

0
77
Jaiswal

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தடுமாறி வரும் இளம் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பேட்டிங் டெக்னிக்கில் ஏற்பட்டிருக்கும் குறைபாடு பற்றி இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மிகவும் சாதாரணமான முறையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். எப்போதும் இல்லாத அளவுக்கு அவரது விக்கெட் மிக வேகமாக எதிரணிக்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தன்னம்பிக்கை குறைந்து விட்டது

தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 32 ரன் ஆவரேஜில் 292 ரன்கள் ஜெய்ஸ்வால் எடுத்திருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த அவரால் அதற்கு மேல் ஜொலிக்க முடியவில்லை. அவரது பேட்டிங் சரிந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் கொஞ்சம் நிச்சயம் அற்ற தன்மை இருக்கிறது. இதற்கு தன்னம்பிக்கை குறைபாடு காரணமாக இருக்கலாம். முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பிறகு அவருடைய பேட்டிங் சரளமாக தெரியவில்லை”

- Advertisement -

இந்த பிரச்சனைகள் இருக்கு

“அவருடைய முன் பாதத்தை சரியாக நகர்த்துவதில் அவருக்கு கட்டுப்பாடு இல்லாமல் போயிருக்கிறது. அவருடன் யாராவது அமர்ந்து அவருடைய பேட்டிங் டெக்னிக் சம்பந்தமாக கொஞ்சம் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அதாவது முன்காலை சரியாக நகர்த்துவது மற்றும் தோள்பட்டையை திறக்காமல் இருப்பது குறித்து வேலை செய்ய வேண்டும்”

இதையும் படிங்க : 178 ரன்.. ஆச்சரியப்படுத்திய பாகிஸ்தான்.. முதல் முறை வாய்ப்பு கிடைத்தும் விழுந்த வெஸ்ட் இண்டீஸ் அணி.. முதல் டி20

“தற்போது அவருடைய பின்புற தோள்பட்டை இரண்டாவது ஸ்லிப் நோக்கி இருக்கிறது. இதனால் பேட் நேராக வருவது கடினம் ஆகிறது. இது விக்கெட் கீப்பர் மற்றும் முதல் ஸ்லிப் நோக்கி இருக்க வேண்டும். இப்படி அமையும் பொழுது பேட் சரியாக நேராக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -