178 ரன்.. ஆச்சரியப்படுத்திய பாகிஸ்தான்.. முதல் முறை வாய்ப்பு கிடைத்தும் விழுந்த வெஸ்ட் இண்டீஸ் அணி.. முதல் டி20

0
132
Ayup

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது.

பாகிஸ்தான் அணி சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை மொத்தமாக தோற்றது. இந்த நிலையில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வி அடைந்து வந்த பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

முதல் முறை கிடைத்த வாய்ப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் டாஸ் தோற்று வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதன் காரணமாகவே தொடரை முழுமையாக தோற்றது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு இளம் தொடக்க ஆட்டக்காரர் சையும் அயூப் 38 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 57 ரன்கள் எடுத்தார். அடுத்தபடியாக பகார் ஜமான் 28 பந்தில் 24 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் தோல்வி

இதைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தது. அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சார்லஸ் 36 பந்தில் 35 ரன், ஜூவல் ஆண்ட்ரூ 33 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் பாகிஸ்தான அணி முதல் டி20 போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : கருண் நாயர் கதை முடிய இருந்தது.. இந்த நேரத்துல தான் இந்த அதிசயம் நடந்துச்சு – தினேஷ் கார்த்திக் பேட்டி

பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய முகமத் நவாஸ் நான்கு ஓவர்களில் 23 ரன்கள் தந்து மூன்று விக்கெட் வீழ்த்தினார். மேலும் பேட்டிங்கில் கலக்கிய சையும் அயூப் இரண்டு ஓவர்கள் பந்து வீசி 20 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். சேசிங் கிடைத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு திரும்பிவிடும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வந்த நிலையில், அப்படி கிடைக்கும் வெஸ்ட் இண்டீஸ் தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -