சிஎஸ்கே மாதிரி.. உள்ளூர் டி20 லீக்ல ஆடற பசங்கள ஐபிஎல் கொண்டு வராதிங்க – கவாஸ்கர் கோபம்

0
218
Gavaskar

17-வது ஐபிஎல் சீசன் நேற்றுடன் நிறைவுக்கு வந்தது. கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடி வென்றது. இந்த நிலையில் உள்ளூரில் நடத்தப்படும் டி20 லீக்குகளில் விளையாட கூடிய வீரர்களை ஐபிஎல் தொடருக்கு கொண்டு வரக்கூடாது என சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

தற்போது ஐபிஎல் தொடருக்கு அந்தந்த மாநில கிரிக்கெட் வாரியங்கள் ஏலத்திற்கான வீரர்களின் பெயரை அனுமதிக்கிறது. தமிழகத்திலிருந்து ஒரு வீரர் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டுமானால், அவருடைய பெயரை தமிழக கிரிக்கெட் வாரியம் அங்கீகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்படி மாநில அளவில் நடைபெறக்கூடிய டி20 லீக்குகளில் பிரகாசிக்கக்கூடிய வீரர்களின் பெயர்களையும் அந்தந்த மாநில கிரிக்கெட் வாரியங்கள் அனுமதிக்கிறது. அப்படி இல்லை என்றால் சில கவனம் இருக்கும் வீரர்களை ஐபிஎல் தொடரில் கொண்டு வருவதற்காக குறிப்பிட்ட அணிகள் அந்த வீரர்கள் பெயரை சேர்க்கின்றன.

இந்த வகையில் எடுத்துக் கொண்டால் உத்திரபிரதேச டி20 லீக்கில் சிறப்பாக விளையாடிய இரண்டு சதங்கள் அடித்த சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி எட்டு கோடிக்கும் அதிகம் கொடுத்து வாங்கியது. பஞ்சாப் லோக்கல் டி20 லீக்கில் சிறப்பாக செயல்பட்ட நமன் திர்ரை மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலைக்கு கொண்டுவந்தது. இப்படித்தான் ஐபிஎல் தொடருக்கு டிஎன்பிஎல் தொடர் மூலமாக நடராஜன் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இதுகுறித்து பேசியிருக்கும் கவாஸ்கர் கூறும் பொழுது “ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தகுதி இல்லாத வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் அணிகள் பெரிய தவறுகள் செய்கின்றன. இப்படிப்பட்ட வீரர்கள் தரத்தை மட்டும் கெடுவதில்லை அவர்களால் பங்களிப்பு செய்ய முடிவதில்லை.

இதையும் படிங்க: வெறும் 9 வீரர்கள்.. ஐபிஎல் தொடரால் ஆஸ்திரேலிய அணிக்கு சிக்கல்.. டி20 உலகக் கோப்பையில் வினோதம்

இந்த லோக்கல் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்களிப்பு செய்ய முடியாது என்பதை அணி நிர்வாகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களுக்கு பெரிய தொகை கொடுக்கப்படுகிறது. மேலும் இவர்கள் ஐபிஎல் தொடருக்கு வரும் பொழுது கணிசமாக செயல் திறன் குறைந்து விடும். இவர்கள் உள்ளூர் டி20 லீக்குகளில் செயல்பட முடியும் ஆனால் ஐபிஎல்-ல் செயல்பட முடியாது. ராஜஸ்தான் குஜராத் உத்தரப் பிரதேஷ் போன்ற மாநிலங்களில் நடத்தப்படுகின்ற டி20 லீக் வீரர்கள் எல்லாம் தேவையில்லை” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -