வெறும் 9 வீரர்கள்.. ஐபிஎல் தொடரால் ஆஸ்திரேலிய அணிக்கு சிக்கல்.. டி20 உலகக் கோப்பையில் வினோதம்

0
4421

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து அணிகளும் தற்போது மிக தீவிரமாக தயாராகி வருகின்றன.

முன்னாள் சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி டி20 உலக கோப்பைக்கு மிக தீவிரமாக தயாராகி வரும் நிலையில், அதன் பயிற்சி போட்டிக்கு வெறும் 9 வீரர்களை வைத்து மட்டுமே களமிறங்கும் வினோத சம்பவம் அரங்கேற உள்ளது.

- Advertisement -

கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் டி20 உலக கோப்பையை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த முறை முடிவு செய்துள்ளது. இதற்காக இரண்டு நாடுகளிலும் மைதானங்கள் தயார் நிலையில் உள்ளன. ஜூன் மாதம் சர்வதேச டி20 போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக மே 27ஆம் தேதியிலிருந்து பயிற்சி போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் மே 29ஆம் தேதி ஆஸ்திரேலியா அணி நமீபியா அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த முறை மிச்சல் மார்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்ள உள்ள முதல் பயிற்சி போட்டியில் ஒன்பது வீரர்களை வைத்தே விளையாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏனெனில் உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள மிச்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய வீரர்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்றுள்ளதால் அவர்களுக்கு சிறிது ஓய்வினை அளிக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே மேக்ஸ் வெல், ஸ்டானிஸ், கேமரூன் கிரீன் ஆகியோர் ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு ஓய்வு எடுத்துவரும் நிலையில் தற்போது இந்த மூன்று வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட உள்ளது. இவர்கள் அனைவரும் ஜூன் ஐந்தாம் தேதி ஓமனுக்கு எதிராக நடைபெற உள்ள முதல் போட்டியில் இணைந்து கொள்வார்கள்.

இது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டன் மிச்சல் மார்ஸ் கூறும் பொழுது
“நண்பர்கள் அனைவரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நிறைய கிரிக்கெட் விளையாடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு குடும்பத்தினருடன் நேரம் செலவிட இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளோம். அவர்கள் குடும்பத்தை பார்க்கவும், புத்துணர்ச்சி பெற்று இந்த நீண்ட தொடரில் விளையாடவும் நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம்.

இதையும் படிங்க:டி20 உலககோப்பை ஐபிஎல் கிடையாது.. அங்க எங்க கைதான் ஓங்கி இருக்கும் – மிட்சல் ஸ்டார்க் பேட்டி

எங்கள் 15 பேர் கொண்ட அணியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். அவர்கள் புத்துணர்ச்சியுடன் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இணைவார்கள்” என்று கூறியிருக்கிறார் பிராட் ஹாட்ஜ், ஆண்ட்ரூ மெக்டொனால்ட் மற்றும் ஜார்ஜ் பெய்லி போன்ற வீரர்கள் இந்த பயிற்சி போட்டியில் இடம் பெறலாம்.

- Advertisement -