தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அதிரடி வீரர்கள் இல்லை ; இந்த அணி கோப்பை வெல்வது சந்தேகம் தான் – கவாஸ்கர் அதிரடிப் பேச்சு

0
552
Sunil Gavaskar

அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த ஐபிஎல் தொடர் நாளை இரவு நடைபெற இருக்கின்றது. நாளை நடைபெற இருக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி நாளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 7:30 மணி அளவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடர் நாளை நடைபெற இருக்கும் நிலையில் தற்பொழுதே இந்த ஐபிஎல் தொடரை வெல்ல போவது எந்த அணி என்கிற எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பல்வேறு கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுடைய கருத்து கணிப்பை சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

- Advertisement -
பஞ்சாப் அணி குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர்

இதுவரை நடந்த ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட ஐபிஎல் தொடரை வெல்லாத அணியாக பஞ்சாப் அணி திகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு அந்த அணியில் விளையாடிய வீரர்கள் மத்தியில் மயங்க் அகர்வால் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை மட்டுமே தக்க வைத்துக் கொண்டது.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி குறித்து ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.”இதுவரை நடந்த ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. நடைபெற இருக்கின்ற ஐபிஎல் தொடரில் கூட அந்த அணி மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

எந்த ஒரு அணி மீது எதிர்பார்ப்பு குறைவாக இருக்கிறதோ அந்த அணியில் உள்ள வீரர்கள் எந்தவித அழுத்தமும் இன்றி அவர்கள் போக்கில் சுதந்திரமாகவும் சிறப்பாகவும் விளையாடுவார்கள். இருப்பினும் அந்த அணியில் தற்போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அதிரடி வீரர்கள் இல்லாதது போல் உள்ளது. அவர்களால் கோப்பையை கைப்பற்றி விட முடியுமா என்கிற கேள்வியும் எழுகிறது.

- Advertisement -

டி20 தொடரை பொறுத்தவரையில் ஒரு அணி தொடரை கைப்பற்ற விரும்பினால் ஆரம்பத்திலிருந்தே தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவிக்க வேண்டும். அதை பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த ஆண்டு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

பஞ்சாப் அணியின் தற்போதைய வீரர்கள்

கடந்த ஆண்டு வரை கேஎல் ராகுல் தலைமையில் விளையாடி வந்த பஞ்சாப் அணி இந்த ஆண்டு முதல் மயங்க் அகர்வால் தலைமையில் விளையாட போகின்றது. அந்த அணியில் நட்சத்திர வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா, ஓபனிங் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ அதிரடி ஆல்ரவுண்டர் வீரர்கள் லியம் லிவிங்ஸ்டன் மற்றும் ஓடினான் ஸ்மித் உள்ளனர்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்திய வீரர்கள் மத்தியில் ஷிகர் தவான், ஹர்பிரீட் பிரார், ஷாருக்கான்,சந்தீப் சர்மா, அர்ஷ்தீப் சிங், ராகுல் சஹர் என பல்வேறு வீரர்களும் இருக்கின்றனர். பல ஆண்டுகளாக நீடித்து வரும் கனவை நனவாக்கி, இந்த ஆண்டு பஞ்சாப் அணி நிறைவேற்றி தொடரை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பஞ்சாப் அணி வீரர்கள் பட்டியல்:

மயங்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங், ஷிகர் தவான், ககிசோ ரபாடா, ஜானி பேர்ஸ்டோ, ராகுல் சாஹர், ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, இஷான் போரல், லியாம் லிவிங்ஸ்டோன், ஒடியன் ஸ்மித்,சந்தீப் சர்மா, ராஜ் அங்கத் பாவா, ரிஷி தவான், பிரேரக் மன்கட், வைபவ் அரோரா, ரிட்டிக் சட்டர்ஜி, பால்தேஜ் தண்டா, அன்ஷ் படேல், நாதன் எல்லிஸ், அதர்வா டைடே, பானுகா ராஜபக்சே, பென்னி ஹோவெல்.