தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் கொல்கத்தா ஆடுகளம் மோசமானது கிடையாது என பயிற்சியாளர் கம்பீருக்கு ஆதரவாக சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததற்கு பிறகு மீண்டும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியை தோற்று இருக்கிறது. இதில் இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 124 ரன்கள் என்பதுதான் கவலையான விஷயமாக இருக்கிறது.
சுனில் கவாஸ்கர் ஆதரவு
இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசும் பொழுது “குறிப்பிட்ட கொல்கத்தா ஆடுகளத்தில் 124 ரன்கள் எடுத்திருக்க முடியும் என்று கம்பீர் பேசியதை நான் முழுதாக இருக்கிறேன். அது பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு கடினமான ஆடுகளம் கிடையாது என்று அவர் கூறியிருந்தார். அதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்”
” நீங்கள் விளையாடியது 50 ஓவர் போட்டியோ அல்லது 20 ஓவர் போட்டியோ கிடையாது. நீங்கள் ஒரு மூன்று பந்துகளை ரன் எடுக்காமல் ஆடிவிட்டால் உடனே வெளியில் சென்று ரன் எடுக்கும்படியான நிலை எதுவும் இல்லை. இது டெஸ்ட் போட்டியை டெஸ்ட் போட்டியாகவே அணுகுவதற்கான ஆடுகளமாக இருந்தது. இந்தியா வைத்திருந்த பேட்டிங் வரிசைக்கு குறைந்தது 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்”
பவுமா என்ன செய்தார்?
” மக்கள் இதை சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் பேட்டிங் நுட்பம் இல்லாததும், இந்த ஆடுகளத்தின் விளையாடுவதற்கான மன உறுதி இல்லாததுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இங்கு எல்லா பந்துகளும் திரும்ப கிடையாது”
இதையும் படிங்க : கம்பீர் தமிழ்நாட்டில் இந்த விஷயத்தை புரிஞ்சுக்கணும்.. வீரர்கள் பயம் குழப்பத்துல இருக்காங்க – முகமது கைஃப் குற்றச்சாட்டு
“தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா வித்தியாசமான குணாதிசயத்தை வெளிப்படுத்தி முழுமையான அர்ப்பணிப்பு உணர்வோடு விளையாடினார். அவர் டெஸ்ட் போட்டியை அதற்குரிய முறையில் விளையாடி ரன்கள் எடுத்தார். தவறு நம்முடைய பேட்ஸ்மேன்கள் மீது தான்” என்று கூறி இருக்கிறார்.






