தமிழ்நாடு சாம்பியன் ஆகாது.. இந்த தகுதியே இல்ல.. உங்க மாநில கோச் என்ன பண்ணார்? – கவாஸ்கர் சர்ச்சை பேச்சு

0
348
Gavaskar

இந்திய உள்நாட்டு ரஞ்சி தொடரில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வெல்ல முடியாத அதற்கான காரணம் குறித்து சுனில் கவாஸ்கர் பேசியிருக்கும் விஷயம் தற்பொழுது சர்ச்சையானதாக மாறியிருக்கிறது.

கடந்த முறை இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இந்த முறை கால் இறுதியில் தோல்வி அடைந்தது. மேலும் கடந்த முறை மும்பையைச் சேர்ந்த பயிற்சியாளர் இருந்தார். அவருக்கும் தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் வெளியில் வர அவர் பதவி விலகினார். இதையெல்லாம் சேர்த்து சுனில் கவாஸ்கர் சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இன்ஜினீர்களால் என்ன பயன்?

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசும் பொழுது “தமிழக வீரர்களில் பெரும்பாலானவர்கள் இன்ஜினியர்களாக இருப்பதால் சாம்பியன் பட்டத்தை வெல்வதில் இது உத்தரவாதம் தரப் போகிறதா? நீங்கள் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு பள்ளி மற்றும் கல்லூரி போட்டிகளில் அந்த மனோபாவத்தை பெற வேண்டும். தமிழ்நாடு இரண்டு முறை ரஞ்சி டிராபி வென்று இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு இருக்கும் திறமையால் இன்னும் பலமுறை வென்று இருக்க வேண்டும்”

“மறுபுறம் ஐபிஎல் தொடரில் சென்னைக்காக இருக்கும் அணிக்கு சென்னையிலிருந்து பிறக்காத தோனியின் தலைமையில் ஐந்து முறை கோப்பைகளை வென்று இருக்கிறார்கள். எனவே மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு, குறிப்பாக மனோபாவத்தை வளர்த்திக் கொண்டால் சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு அணி வெல்லும்”

- Advertisement -

உங்கள் பயிற்சியாளர் வந்து என்ன நடந்தது?

“இந்த வருடம் ரஞ்சி தொடரில் தமிழ்நாடு அணி கால் இறுதி சுற்றில் வெளியேற்றப்பட்டது. பயிற்சியாளராக அவர்களுடைய மண்ணின் மைந்தன் லட்சுமிபதி பாலாஜி இருந்தார். இந்த நட்சத்திர வீரர்களை பயிற்சியாளராக கொண்டு வருவதன் மூலம் சாம்பியன் பட்டத்தை வென்று விட முடியும் என்று நான் கேள்விப்படவில்லை”

இதையும் படிங்க : சச்சின் சிங்கம்தான்.. ஆனா விராட் கோலிதான் சிறந்த பேட்ஸ்மேன்.. இதுதான் காரணம் – சேவாக் பேட்டி

“மும்பை பயிற்சியாளர் என்மேல் ஏற்பட்ட கோபம் மும்பை மேல் இருக்கும் கோபம் மட்டும்தானா? தமிழ்நாடு அணி சில சிறந்த வீரர்களை எப்பொழுதும் கொண்டு இருக்கிறது. ஆனால் முக்கியமான கட்டங்கள் வரும்பொழுது அவர்கள் தென் ஆப்பிரிக்க அணி போல ஆகிவிடுகிறார்கள். அவர்கள் ரஞ்சி தொடரில் தேவையற்றவர்களாக காணப்படுகிறார்கள். இதற்கு சாம்பியன் பட்டத்தை வெல்லும் மனோபாவம் தேவையாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -