அவசர பட்டுட்டியே தம்பி.. டிராவிஸ் ஹெட்ட முறைச்சு இங்க நீ மாட்டிக்கிட்ட – சுனில் கவாஸ்கர் விமர்சனம்

0
104

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி தற்போது வலுவான நிலையில் இருக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி 140 ரன்கள் குவித்தார்.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்ட முகமது சிராஜ் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

சதம் அடித்த டிராவிஸ் ஹெட்

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது. அதற்கு பின்னர் தனது முதல் இன்னிங்ஸ் துவங்கிய ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட் வழக்கம் போல இந்திய பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினார்.

141 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 140 ரன்கள் குவித்து இறுதியாக முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அப்போது சிராஜ் கோபமான முறையில் அவரை வழி அனுப்பி வைக்க பதிலுக்கு ஹெட் ஏதோ கூறிவிட்டு வெளியேறினார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் 140 ரன்கள் அடித்த உள்ளூர் ஹீரோவை பாராட்டி அனுப்பி இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

- Advertisement -

வில்லனாக மாறிய முகமது சிராஜ்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” ஹெட் 140 ரன்கள் அடித்திருக்கிறார். அவர் ஒன்று அல்லது இரண்டு ரன்களில் ஆட்டமிழந்து இருந்தால் அவரை ஆக்ரோஷமான முறையில் சிராஜ் வெளியேற்றி இருந்தால் அது வேறு விதமாக பார்க்கப்படும். ஆனால் சிறப்பாக விளையாடி இருக்கும் உள்ளூர் ஹீரோவை அவர் இந்த முறையில் வழி அனுப்பி இருப்பதால் தற்போது ஆஸ்திரேலியா மக்களுக்கு அவர் வில்லனாக மாறியிருக்கிறார். அவரது சதத்தை சிராஜ் பாராட்டி இருந்தால் சிராஜ் பாராட்டப்பட்டு இருப்பார்.

இதையும் படிங்க:தப்பு கோலி மேல இல்ல.. அவர் அவுட் ஆனப்போ பிரச்னை இங்கதான் நடந்துருக்கு – ஆதரவு தெரிவிக்கும் புஜாரா

அப்படி செய்யாத நிலையில் தான் சிராஜ் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார் ” என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் அடித்திருக்கும் நிலையில் இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதம் இருப்பதால் இந்தப் போட்டியை இந்திய அணி டிரா அல்லது வெற்றி பெறுவது என்பதை கடினமான விஷயமாக மாறி இருக்கிறது. எனவே ஏதாவது அதிசயம் நிகழுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -