தப்பு கோலி மேல இல்ல.. அவர் அவுட் ஆனப்போ பிரச்னை இங்கதான் நடந்துருக்கு – ஆதரவு தெரிவிக்கும் புஜாரா

0
564

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி ஆட்டம் இழந்து வெளியேறிய விதம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா பிங்க் டெஸ்ட்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் பகல் இரவு ஆட்டமான இரண்டாவது பிங்க் பந்து டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் குவித்து வெளியேற, அதற்குப் பின்னர் தனது முதல் இன்னிங்ஸ் துவங்கிய ஆஸ்திரேலியா அணி 337 ரன்கள் குவித்தது.

அதற்குப் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் குவித்துள்ளது. இதில் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி இந்த முறை 11 ரன்கள் அடித்த நிலையில் போலந்து பந்துவீச்சில் வெளியேறினார். தற்போது விராட் கோலி விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் மற்றொரு சக கிரிக்கெட் வீரரான புஜாரா போலந்து திறமையான பந்தினை வீசி இருக்கிறார் எனவும், விராட் கோலி குறித்தும் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பவுலருக்கு தான் முழு கிரெடிட்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலிக்கு எதிராக போலந்து பந்து வீசிய விதத்திற்கு பவுலருக்கே முழு பாராட்டையும் கொடுக்க விரும்புகிறேன். ஏனென்றால் போலந்து பந்து வீச வரும்போது உருவாக்கும் கோணம் அது ஒரு பேட்ஸ்மேனுக்கு கடினமாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு பந்தும் பேட்ஸ்மேன் நோக்கி உள்ளே வரும்போது அதை விட்டுவிட்டு வெளியேறுவது மிகவும் கடினம். ஒவ்வொரு முறையும் நீங்கள் அதை விளையாட வேண்டும் என்று தான் உணர்வீர்கள்.

இதையும் படிங்க:ஷமி எப்போது ஆஸ்திரேலியா செல்கிறார்?.. ரோகித் குழுவுக்கு மகிழ்ச்சியான செய்தி.. வெளியான தகவல்கள்

குறிப்பாக லென்த்தில் அடிக்கப்பட்ட தையல் பகுதி பேட்ஸ்மேன் நோக்கி உள்ளே வந்து பிறகு அங்கிருந்து வெளியேறுகிறது. எனவே அந்த சூழ்நிலையில் அது நிச்சயமற்ற பகுதியாக இருப்பதால் அந்தப் பந்தை ஆடாமல் விட்டுவிடுவது என்பது எளிதான காரியம் கிடையாது. இதனால் அந்த புகழ் பவுலருக்கே சேரும். இதனால்தான் விராட் கோலி அந்த பந்தை எதிர்கொண்டு விளையாட வேண்டி இருந்தது” என்று கூறி இருக்கிறார். இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் தற்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் குவித்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -