ஜடேஜா போராடினாரு.. ஆனா இந்த வாய்ப்பை அவர் மிஸ் பண்ணாம இருந்திருந்தா இந்தியா கண்டிப்பா ஜெயிச்சிருக்கும் – சுனில் கவாஸ்கர்

0
182

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த விதம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

3வது டெஸ்ட் தோல்வி

இங்கிலாந்து பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. அதில் குறிப்பாக மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 192 ரன்கள் இலக்கை சேஸ் செய்ய முடியாமல் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இதில் ஐந்தாவது நாளில் ரவீந்திர ஜடேஜா போராடிக் கொண்டிருந்தபோது 181 பந்துகளை எதிர் கொண்டு 61 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். அப்போது பெரும்பாலான பந்துகளை தடுத்து ஆடுவதிலேயே குறியாக இருந்தார். இந்த சூழ்நிலையில் சுனில் கவாஸ்கர் முக்கிய பந்துவீச்சாளர்களின் பந்துகளை தடுத்து ஆடினாலும் ஜோ ரூட் சோயப் பசீர் போன்ற பகுதி நேர சுழற் பந்துவீச்சினை ஜடேஜா அட்டாக் செய்து விளையாடி இருக்கலாம் என சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஜடேஜா இதை செஞ்சிருக்கலாம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “60-70 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்த போட்டியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கும். அது இந்திய அணிக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை. ஜோ ரூட் மற்றும் சோயப் பஷீர் பந்து வீசும் போது ஜடேஜா தூக்கி அடித்து ஆட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் வித்தியாசமான வாய்ப்பை அவர்களது பந்துவீச்சில் ஜடேஜா பயன்படுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனாலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் போராட்ட குணத்தை வெளிப்படுத்திய ஜடேஜாவுக்கு முழு மதிப்பெண்கள்” என்று கவாஸ்கர் பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க:இது தான் உண்மையான கிரிக்கெட்.. இங்கிலாந்து வீரர்களின் செயலால் என் மனம் நெகிழ்ந்துவிட்டது.. அஸ்வின் பாராட்டு

ஓரளவு வெற்றிப் பாதையில் இருந்த இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியின் தோல்வி மூலமாக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது 2-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. எனவே அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் தொடரை வெற்றி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -