இது தான் உண்மையான கிரிக்கெட்.. இங்கிலாந்து வீரர்களின் செயலால் என் மனம் நெகிழ்ந்துவிட்டது.. அஸ்வின் பாராட்டு

0
314

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் நடந்து முடிந்து விட்டது. இந்த டெஸ்ட் போட்டி முழுவதும் இரு அணி வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் மோதலில் ஈடுபட்டு கொண்டார்கள்.எனினும் கடைசி நேரத்தில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அப்போது சோகத்தில் இருந்த சிராஜ் மற்றும் ஜடேஜாவை இங்கிலாந்து அணி வீரர்கள் தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்தி ஆறுதல் கூறினர். இது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து சமூக வலைத்தளத்தின் வீடியோ வெளியிட்டுள்ள அஸ்வின், சிராஜ் ஆட்டம் இழந்தவுடன் ஜாக் கிராலி மற்றும் ஜோ ரூட் ஆகியோர் அவரிடம் வந்து அவரை சமாதானப்படுத்தினார்கள்.

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:

இதுதான் உண்மையான கிரிக்கெட். டெஸ்ட் கிரிக்கெட்டின் மகிமையே இது தான். சில சமயம் நேரத்தை வீணடிப்பது என்பது ஆட்டத்தில் ஒரு பகுதியாக தான் நான் நினைக்கின்றேன்.அதையெல்லாம் சுட்டிக்காட்டி கிரிக்கெட்டின் ஸ்பிரிட் போய்விட்டது என்றெல்லாம் பேசுகிறார்கள். உங்களுக்கு போட்டியை வெல்ல வேண்டும். இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

எதிரணி வீரர்களுடன் மோதுவது என்பது முக்கியம் தான்.ஆனால் போட்டியின் முடிவில் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உள்ள வித்தியாசங்களை மறந்து கைகுலுக்கி நட்புடன் செல்ல வேண்டும்.கடந்த ஐந்து நாட்களாக நடந்த மோதலை சாக் கிராலியும் ஜோ ரூட்டும் தட்டி தூரப்போட்டு கைகுலுக்க வந்திருக்கிறார்கள். நான் ஜோர் ரூட் உடன் ராஜஸ்தான் அணியில் ஐபிஎல் தொடரின் போது விளையாடினேன்.

- Advertisement -

நாங்கள் மறந்துவிட்டோம்:

ரூட் உண்மையான ஜென்டில்மேன். இந்த டெஸ்ட் போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஒரு அபாரமான கேட்சை பிடித்து ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்து இருக்கின்றார். இது போன்ற கடினமான போட்டியை வெல்லும் போது நாம் கொண்டாட்டத்தில் ஈடுபடுவோம். இதனால் தோற்ற அணியை மறந்து விடுவோம். எங்களுக்கு கூட அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அப்படித்தான் நடந்தது.

இதையும் படிங்க: கம்பீருக்கு எழுந்த எதிர்ப்பு.. இந்திய அணியில் இருக்கும் பெரிய ஓட்டை.. முன்னாள் வீரர்கள் சாடல்

ஆஸ்திரேலியா அணி 28 அல்லது 29 ரன்கள் தேவைப்படும்போது கடைசி விக்கெட் விழுந்தது.நாங்கள் இதனை கொண்டாடினோம். அப்போது களத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட்டோம். ஆனால் ஜோரூட்டும் ஜாக் கிராலியும் உடனே வந்து சிராஜை பார்த்து பேசி அவர் தோள் மீது கை போட்டது என்பதுதான் இந்த டெஸ்ட் போட்டியில் மிகச்சிறந்த தருணமாக நான் நினைக்கின்றேன் என அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -