கிரிக்கெட் உலகில் இந்திய அணி இல்லனா.. விமர்சனம் செய்யும் உங்களுக்கே சம்பளம் இல்லை – சுனில் கவாஸ்கர் பதிலடி

0
285

இந்திய கிரிக்கெட்அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டி நாளை நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பல முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் மீது விமர்சனம்

இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விளையாட மறுத்ததை அடுத்து துபாயில் விளையாடி வருகிறது. துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிராக முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி அதற்கு பின்னர் பாகிஸ்தானில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடி வருவதாகவும், அதே மற்ற அணிகளை காட்டிலும் இந்திய அணிக்கு அதிக நன்மைகளை தருகிறது என இங்கிலாந்து அணையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மைக்கேல் வாகன் நாசர் உசேன் போன்ற வீரர்கள் தங்களது விமர்சனங்களை பதிவு செய்திருந்தார்கள். இந்த சூழ்நிலையில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இவர்களது கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். முதலில் அவர்களது அணி ஏன் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை என்பதில் கவனம் செலுத்துமாறு சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

சுனில் கவாஸ்கர் பதிலடி

இதுகுறித்து அவர் கூறும் போது “விமர்சனம் செய்பவர்கள் அனைவரும் புத்திசாலிகள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்று நான் நினைக்கிறேன். உங்கள் அணி ஏன் தகுதி பெறவில்லை என்று நீங்கள் பார்க்கக் கூடாது? அதைத்தான் நான் உங்களிடம் கேட்க போகிறேன், தொடர்ந்து இந்தியாவின் மீது கவனம் செலுத்துவதற்கு பதிலாக உங்கள் அணியின் மீது முதலில் கவனம் செலுத்துங்கள். நான் முன்பே சொன்னது போல அதைப்பற்றி கருத்து சொல்ல தேவையில்லை.

இதையும் படிங்க:ஒத்துக்குறேன்.. எனக்கும் அவருக்கும் போட்டி இருப்பது உண்மை.. ஆனா நான் விளையாடுவது இதற்காக மட்டுமே – கேஎல் ராகுல்

அவர்கள் எப்போதும் துக்கத்தில் இருக்கிறார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியும். தரம், திறமை முக்கியமாக வருவாய் இட்டுவதில் இந்திய அணி எந்த நிலையில் இருக்கிறது என்பது நன்றாக தெரியும். அவர்களின் சம்பளமும் இந்திய அணி கிரிக்கெட் உலகிற்கு கொண்டு வருவதில் இருந்தே வருகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.

- Advertisement -