ஒத்துக்குறேன்.. எனக்கும் அவருக்கும் போட்டி இருப்பது உண்மை.. ஆனா நான் விளையாடுவது இதற்காக மட்டுமே – கேஎல் ராகுல்

0
326

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இரண்டு போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதற்காக இரண்டு அணிகளும் தற்போது மிக தீவிரமான முறையில் தயாராகி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் ரிஷப் பண்ட் குறித்த சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு

இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடித்து விளையாடி வருகிறார். ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் அவருக்கு இந்திய அணியின் நிலையான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. கடந்த ஒரு நாள் உலக கோப்பையில் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலும் அற்புதமாக செயல்பட்ட கேஎல் ராகுல் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார்.

மிடில் வரிசையில் களமிறங்கி ஆட்டத்தின் சூழ்நிலையை தெளிவாக உணர்ந்து பக்குவமாக பேட்டிங் செய்து விளையாடி வரும் நிலையில், ரோஹித் மற்றும் கௌதம் கம்பீர் கூட்டணி ராகுலுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் தனக்கும், ரிஷப் பண்ட் இருவருக்கும் இடையே போட்டி இருப்பது உண்மைதான் எனவும், இருப்பினும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் தருணங்களில் அணிக்காக சிறப்பாக விளையாடுவதை மட்டுமே நான் உற்று நோக்குகிறேன் என்று சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

போட்டியிருப்பது உண்மைதான்

இதுகுறித்து கே.எல் ராகுல் பேசும்போது “ரிஷப் பண்ட் உடன் போட்டியிருப்பது உண்மைதான் நான் பொய் சொல்ல மாட்டேன். பண்ட் மிகவும் திறமையான ஒரு வீரர், அவரால் என்ன செய்ய முடியும், எப்படி ஆக்ரோஷமாக விளையாட முடியும், ஒரு போட்டியை எப்படி விரைவாக அவரால் மாற்ற முடியும் என்பது குறித்து அனைவருக்கும் தெரியும். எனவே கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவருக்கும் இடையே என்னை விளையாட வைக்க வேண்டுமா? அல்லது அவரை விளையாட வைக்க வேண்டுமா? என்பது குறித்த தூண்டுதல் எப்போதும் இருக்கும்.

இதையும் படிங்க:62 ஓவர்.. கைவிடப்பட்ட போட்டி.. ஆஸி செமி பைனலுக்கு தகுதி.. இங்கிலாந்து கையில் ஆப்கானின் சிறிய அரை இறுதி வாய்ப்பு

எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என்னால் எப்படி சிறப்பாக விளையாட முடியும் என்பதை நான் உற்று நோக்குகிறேன். நான் ரிஷப் பண்ட் உடன் போட்டியிட முயற்சிக்கவில்லை. நான் அவரைப் போல விளையாட முயற்சிக்கவில்லை அல்லது அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது மற்றவர்களைப் போல விளையாட முயற்சிக்கவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எனவே எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது இந்திய அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதை மட்டுமே நான் பார்க்கிறேன்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -