இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 போட்டியில் அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் இடையேயான தொடக்க கூட்டணியே வெற்றிக்கு முக்கிய காரணம் என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார். இதன் காரணமாக சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனாலும் இந்தியாவால் வெற்றியை எளிதாக எட்ட முடிந்ததாகவும் அவர் கூறினார்.
துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிய கோப்பைப் போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்தியா, பாகிஸ்தானை 171-5 என்ற ஸ்கோருக்குள் கட்டுப்படுத்தியது. பின்னர், 18.5 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்திய அணி, அபிஷேக் மற்றும் கில் இணைந்து 9.5 ஓவர்களில் 105 ரன்கள் எடுத்து அபார தொடக்கம் அளித்தனர்.
இந்த 2 பேர் தான் காரணம்:
இது குறித்து பேசிய கவாஸ்கர்,
“இந்தியா பவர்பிளேவை அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் இணையின் தொடக்க பார்ட்னர்ஷிப் முற்றிலும் ஆதிக்கம் செலுத்தியது. அவர்கள் ஆட்டத்தை பாகிஸ்தானிடமிருந்து முற்றிலும் பறித்து விட்டனர். முதல் ஆறு ஓவர்களில் ஒரு விக்கெட் அல்லது இரண்டு விக்கெட்டுகள் எடுத்திருந்தால், இந்தியாவுக்கு கடினமாக இருந்திருக்கும்.
இந்தியா இலக்கை எட்டியிருக்காது என்று சொல்லவில்லை. ஆனால் இவ்வளவு எளிதாக அது இருந்திருக்காது. இந்தியாவால் 2-3 விக்கெட்டுகளை இழந்து, தங்கள் கேப்டன் சூர்யகுமார் யாதவை டக் அவுட்டில் இழந்த பின்னரும் ஒரு ஓவருக்கு மேல் மீதம் இருக்க வெற்றியைப் பெற முடிந்தது.
பல ஆப்சன்கள் இருக்கிறது:
இது இந்தியாவின் பேட்டிங் பலத்தை காட்டுகிறது. இது ஆல் ரவுண்டர்களான சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் பட்டேல் ஆகியோரால் சாத்தியமானது. இது கேப்டனுக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பல ஆப்சன்களை அளிக்கிறது.”அபிஷேக் சர்மா 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் குவித்தார். மறுபுறம், சுப்மன் கில் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க: சிவம் துபேவை சாதாரணமா நினைக்காதீங்க.. நேற்று பாகிஸ்தான் தோற்றதே இங்கே தான்.. ஸ்ரீகாந்த் பாராட்டு
திலக் வர்மா 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அணிக்கு உறுதுணையாக இருந்தார்.பாகிஸ்தான் முதல் பாதியில் பேட்டிங்கில் சவால் அளித்தாலும், இந்தியா இறுதியில் மிகச் சிறப்பாக ஆடியது. இந்த முடிவு இரு அணிகளுக்கு இடையேயான பெரிய இடைவெளியை மீண்டும் வெளிப்படுத்தியது. இது குறித்து விளக்கம் அளித்த கவாஸ்கர்,
“இது மனோபலம். வீரர்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் உள்ளனர்.
அவர்களுக்கு சாத்தியமற்றவற்றை சாதிக்கும் திறனில் அபரிமிதமான நம்பிக்கை உள்ளது. இது எந்த அணியையும் புரட்டிப்போட உதவுகிறது. நான்கு கேட்சுகளை தவறவிட்டபோதிலும், இது 20-30 ரன்கள் அதிகமாக சென்று இருக்கும். ஆனால் இடைவேளைக்குப் பிறகு அவர்கள் திரும்பி வந்து பந்து வீசிய விதம். இடைவேளையில் பாகிஸ்தான் 91-1 என்ற நிலையில் இருந்தது, மேலும் 120 ரன்கள் எடுத்திருக்கலாம்.” என்றார்.






