சிவம் துபேவை சாதாரணமா நினைக்காதீங்க.. நேற்று பாகிஸ்தான் தோற்றதே இங்கே தான்.. ஸ்ரீகாந்த் பாராட்டு

0
193

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 ஓவர்களில் 91/1 என்று வலுவாக முன்னேறியது. இருப்பினும், 11வது ஓவரில் பந்துவீசத் தொடங்கிய துபே, 72 ரன்கள் கொண்ட இரண்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பை உடனடியாக உடைத்தார். அவர் தனது ஓவரில் பாகிஸ்தானின் முன்னணி வீரர் சாஹிப்ஜாதா ஃபர்ஹானையும் வீழ்த்தினார்.

சிவம் துபே, நான்கு ஓவர்களில் 33 ரன்களை விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தனது யூடியூப் சேனலில் துபேயின் பந்துவீச்சு குறித்து பேசிய ஸ்ரீகாந்த்,
“இந்திய அணி அல்லது ரசிகர்கள் ஷிவம் துபேயை குறைத்து மதிப்பிடுவதை விட, எதிரணி பேட்ஸ்மேன்கள் அவரை குறைத்து மதிப்பிடுகின்றனர். இது அவருக்கு சாதகமாக உள்ளது. அவர்கள் ஏற்கனவே பும்ரா மற்றும் மற்றவர்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.”

- Advertisement -

ஸ்ரீகாந்த் பாராட்டு:

“எனவே, அந்த நேரத்தில் அவர் பந்துவீச வந்தபோது, அவரை மிகவும் இலேசாக எடுத்துக் கொண்டனர், அவர் ஒரு சாதாரண பவுலர் என்று நினைத்தனர். அவரை எளிதாக எதிர்கொள்ளலாம் என்று நினைப்பதால் அவர்கள் அவருக்கு விக்கெட்டுகளை இழக்கின்றனர். அவரது விக்கெட்டுகள் அனைத்தும் பேட்ஸ்மேன்கள் அவரை அடித்து நொறுக்க முயற்சிக்கும்போது வந்தவை. “

“நிச்சயமாக, அவருக்கு பாராட்டு கொடுக்க வேண்டும், ஏனெனில் இன்று அவர் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரால்தான் நமக்கு திருப்புமுனை கிடைத்தது.அவர் தனது முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அது முக்கியமான திருப்புமுனையாக இருந்தது.”

- Advertisement -

சிவம் துபே செயல்பாடு:

“அந்த நேரத்தில் அவர்கள் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தனர். நன்றாக ஆடிக் கொண்டிருந்த இரண்டு பேட்ஸ்மேன்களை அவர் வீழ்த்தினார். ஷிவம் துபே ஒரு பேட்ஸ்மேனை விட பவுலராகவே அதிகம் விளையாடுகிறார். சாம்சன் 5வது இடத்திலும், ஹர்திக் 6வது இடத்திலும் இருப்பதால், துபே 7 அல்லது 8வது இடத்திற்கு முன்பு பேட் செய்ய வருவார் என்று நான் நினைக்கவில்லை,” என்று ஸ்ரீகாந்த் கூறினார்.

இதையும் படிங்க: அபிஷேக் எனக்கு கவாஸ்கர் சொன்னத உங்களுக்கு சொல்றேன்.. இத மட்டும் இனி செய்யாதீங்க – சேவாக் அறிவுரை

ஆசிய கோப்பையில் இதுவரை ஐந்து விக்கெட்டுகளை 13.60 சராசரி மற்றும் 7.55 என்ற எகானமியுடன் உள்ளார்.இந்திய அணி எட்டாவது இடம் வரை பேட்டிங்  வைத்திருப்பதால், துபே இந்த தொடரில் இரண்டு முறை மட்டுமே பேட் செய்து, 15 பந்துகளில் 15 ரன்கள் எடுத்துள்ளார்.

- Advertisement -